பராசக்தி ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நல்ல பெண்ணால் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன் – சுதா கொங்கரா குறித்து பாராட்டி பேசிய ரவி மோகன்
Ravi Mohan Talks About Sudha Kongara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 1989-ம் ஆண்டு வெளியான ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் ரவி மோகன். தொடர்ந்து 1994-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் ரவிமோகன் தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்த எடிட்டர் மோகனின் இளைய மகன் ஆவார். ரவி மோகனின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் 2003-ம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார் ரவி மோகன். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் ரவி மோகன் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவதாரங்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டு நடிகர் ரவி மோகன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக வரிசைக்கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் பராசக்தி படத்தின் விழாவில் நடிகர் ரவி மோகன் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




சுதா கொங்கரா குறித்து பாராட்டி பேசிய ரவி மோகன்:
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் ஒரு நல்ல மனிதரால் சூழப்பட்டிருக்கும்போது ஒரு பெண் எப்படிப் பாதுகாப்பாக உணர்வாரோ, அதேபோல், எந்தவித அகங்காரமும் இல்லாமல், மரியாதையுடனும் அன்படனும் நடந்துகொண்ட நல்ல பெண்ணான சுதா கொங்கராவால் சூழப்பட்டிருந்தபோது, பரசக்தி படப்பிடிப்புத் தளத்தில் நான் எப்படி உணர்ந்தேனோ, அப்படி உணர்கிறேன். ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையின் வலியை கிண்டலாகக் குறிப்பிடுகிறார் என சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read… பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“How a woman feels safe, surrounded by a good man in a shooting spot,..like how I felt in #Parasakthi shooting spot by a good woman SudhaKongara, without any ego and with respect & love”
– #Ravimohan sarcastically mentions the pain with his personal life💔pic.twitter.com/qJ1NoSMdP3— AmuthaBharathi (@CinemaWithAB) January 6, 2026
Also Read… பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்