அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பகவந்த் கேசரி
Bhagavanth Kesari: நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று கூறிவரும் நிலையில் படம் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 09-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர். இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி என்ற படத்தின் ரீமேக் என தகவல்கள் வெளியாகி இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் தொடர்ந்து இயக்குநர் எச் வினோத் பேட்டியில் படம் ரீமேக்கா, இல்லையா என்பது குறித்து வெளிப்படையாக பேசாமல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்திற்கு வாங்க. இது முழுக்க முழுக்க தளபதி படம் என்று தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக விஜய் ரசிகர்களும் அது ரீமேக் படமாக இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி நிச்சயமாக படத்தைப் பார்ப்போம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.




அமேசானில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பகவந்த் கேசரி:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. இந்த ட்ரெய்லரில் நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் முன்னதாக வெளியான பகவந்த் கேசரி படத்தின் காட்சிகள் அதிகமாக இருப்பதை ரசிகர்கள் ஒப்பிட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் உள்ள பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தினை ரசிகர்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ட்ரெண்டிங்கில் தற்போது முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி வாரம்… அட அதில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Trending Number 1 – #BhagavanthKesari – Amazon Prime Video#JanaNayagan – Jan 9 pic.twitter.com/c57eZl9gJt
— Movie Tamil (@_MovieTamil) January 5, 2026
Also Read… யூடியூபில் 26 மில்லியன் பார்வைகளைக் கடந்தது பராசக்தி படத்தின் ட்ரெய்லர்