Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: பராசக்தி படத்திற்கு UK-வில் வரவேற்பு.. ப்ரீ-புக்கிங்கில் தெறிக்கவிடும் பராசக்தி!

Parasakthi UK Pre-booking: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பராசக்தி படமானது 2026ம் ஆண்டு ஜனவரியில் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் UK ப்ரீ-புக்கிங் எவ்வளவு டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Parasakthi: பராசக்தி படத்திற்கு UK-வில் வரவேற்பு.. ப்ரீ-புக்கிங்கில் தெறிக்கவிடும் பராசக்தி!
பராசக்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 03 Jan 2026 15:12 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் அமரன் (Amaran) மற்றும் அயலான் படத்திற்கு பின் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, வில்லனாக பிரபல நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் அதர்வா (Athrvaa), ஸ்ரீலீலா (Sreeleela), ராணா, பேசில் ஜோசப் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துளள்னர். இவர்களின் கூட்டணியில் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படமானது உருவாகியுள்ளது. இதை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க , டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash) இசையமைத்துள்ள நிலையில், இது அவரின் 100வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இப்படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளிநாடு டிக்கெட் ப்ரீ- புக்கிங் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், இங்கிலாந்தில் மட்டுமே இதுவரை சுமார் 4000 + டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கும் வெளிநாடுகளில் வரவேற்பு இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் அந்த நடிகரை பார்த்துதான் அதையெல்லாம் கத்துக்கிட்டேன்- சியான் விக்ரம் ஓபன் டாக்!

பராசக்தி பட UK டிக்கெட் ப்ரீ-புக்கிங் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

பராசக்தி படத்தின் FDFS காட்சிகள் எப்போது :

இந்த பராசக்தி படமானது இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் குறித்த கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு போராட்ட வீரனாக நடித்துள்ளார். இப்படமானது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படமானது வரும் 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், 10ம் தேதி காலை 9 மணி காட்சிகள் முதல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் இயக்குநர் இவரா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று 2025 ஜனவரி 3ம் தேதியில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. அந்த இந்த நிகழ்ச்சியில் சிவகார்திகேயன் என்ன பேசப்போகிறார் என மொத்த ரசிகர்களும் காத்திருக்கின்றனர். மேலும் இப்படமானது தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் மோதும் நிலையில், பாக்ஸ் ஆபிசில் கடும் போட்டி நிலவும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. என்ன நடக்கிறது என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.