Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.. நடந்தது என்ன?

Parasakthi Story Theft Case: நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம்தான் பராசக்தி. இந்த படத்தின் கதை, தனது செம்மொழி படத்தின் கதையுடன் ஒத்துப்போவதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வாட்ச் நிலையில், படத்தின் ரிலீஸ் தடை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Parasakthi: சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு.. நடந்தது என்ன?
பராசக்தி படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jan 2026 17:07 PM IST

இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடிக்க, தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது இந்தி திணிப்பிற்கு எதிரான கதைக்களம் மற்றும் மாணவர்களின் போராட்டம் குறித்த மிக பிரம்மாண்டமாக கதையில் தயாராகியுள்ளது. இதை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Bhaskaran) தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாகவே வந்துள்ளது. அந்த வகையில் கடந்தஹ் 2025 டிசம்பர் இறுதியில் இந்த படமானது “செம்மொழி” (Semmozhi) என்ற கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் (Rajendran) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Chennai High Court) மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது அப்போது விசாரிக்கப்பட்டு, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் போதிய அதரங்களை இன்று 2026ம் ஆண்டு ஜனவரி 2ல் சமர்ப்பிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: அரசன் படத்தில் சிலம்பரன் இத்தனை தோற்றங்களில் இருப்பாரா? வைரலாகும் தகவல்

பராசக்தி இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான பதிவு :

பராசக்தி படத்தின் கதைத் திருட்டு வழக்கு விசாரணை :

இந்த கதை திருட்டு வழக்கானது இன்று 2026ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதியில் விசாரிக்கப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் செம்மொழி படத்தின் கதை திருடியது தொடர்பாக இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என்று பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பெரும் பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தின் ரிலிஸிற்கு தடை விதித்தல் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் பேசப்பட்டிருந்தது. மேலும் அனைத்து தரப்பின் விவாதங்களை கேட்ட நீதிபதி, “இந்த பராசக்தி படத்தின் தயாரிப்பும் கடந்த 2024ல் நடக்கிறது என்றும் தெரிந்தும், 2025ம் ஆண்டு டிசம்பர் இறுதியில்தான் ராஜேந்திரன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதன் காரனமாக இப்படத்தின் ரிலீஸை தடை செய்யமுடியாது என அந்த மனுவை தள்ளிப்படி செய்தார்.

இதையும் படிங்க: D54 படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளை தொடங்கிய படக்குழு – வைரலாகும் போட்டோ!

மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு பராசக்தி செம்மொழி கதைதானா? என்று, ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும்படியாக உத்தரவிட்டும் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் மீண்டும் இந்த அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்யவேண்டும் என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 2026 ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.