திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரும் கலந்துக்கொள்வர். இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்களை கவனிப்பதிலேயே நேரம் போய்விடும். இந்த சூழலில் மணமகன், மணகளை சொல்லவா வேண்டும். வாழ்த்துக்களை வாங்கிக்கொண்டு நன்றி தெரிவிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும். இத்தகைய பரபரப்பான சூழலில் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், திருமணத்திற்கு உறவினரை போல வருகை தந்த ஒருவர் மணப்பெண்ணின் பையையே திருடி சென்றுள்ளார்.