AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடிக்கும் சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!

Saraswathi Movie Official Trailer | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது இயக்குநராகவும் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை நடிகர் நானி தற்போது வெளியிட்டுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடிக்கும் சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!
சரஸ்வதிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 21 Feb 2026 11:31 AM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சரத்குமார். சரத்குமாருக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் பிறந்த பெண் குழந்தைதான் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு ஜோடியாக போடா போடி படத்தில் நடித்தார். இதுதான் இவர் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பலப் படங்களில் நடித்தார் நடிகை வரலட்சுமி சரத்குமார். தொடர்ந்து தமிழ் படங்களில் மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக இவர் அதிக அளவில் தெலுங்கு சினிமா படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகியாக சினிமாவில் அறிமுகம் ஆனதால் தொடர்ந்து நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் வில்லியாகவும் பலப் படங்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் நடிகையாக வலம் வந்த வரலட்சுமி சரத்குமார் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள சரஸ்வதி படத்தில் அவரே கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார்.

வரலட்சுமி சரத்குமாரின் சரஸ்வதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட நானி:

இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை நடிகர் நானி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் சரஸ்வதி படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் உடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, கிஷோர், ராவ் ரமேஷ், முரளி சர்மா, ராதிகா சரத்குமார், நாசர், துளசி, சப்தகிரி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, ரகுபாபு, கெட்அப் ஸ்ரீனு, வெங்கட், நிவேக்ஷா, பிரமிளா ராணி என பலர் நடித்துள்ளனர். பள்ளிக்கு சென்ற மகளை காணவில்லை என்று தேடும் ஒரு தாயின் போராட்டமாக இந்த கதை உள்ளது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

Also Read… சிம்புவின் அரசன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை சைத்ரா ஆச்சர்

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்