AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ram In Leela Movie: ரியோ ராஜின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ராம் இன் லீலா’ படக்குழு!

Rio Rajs Birthday: தமிழ் சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நுழைந்த நடிகர்களில் ஒருவர் ரியோ ராஜ். இவர் இன்று (17/02/2026) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவர் நடித்துவரும் ராம் இன் லீலா படக்குழு பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Ram In Leela Movie: ரியோ ராஜின் பிறந்தநாள்.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ராம் இன் லீலா’ படக்குழு!
ரியோவின் ராம் இன் லீலா திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Feb 2026 15:16 PM IST

கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் கதாநாயகனாக அறிமுகமானார். சரவணன் மீனாட்சி சீசன் 3 (Saravanan Meenatchi) சீரியலில், சரவணன் என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றிவந்தார். அந்த விதத்தில் இவர் சினிமாவில் “நெஞ்சம்முண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” (Nenjamundu Nermaiyundu Odu Raja) என்ற படத்தில் நடித்து கதாநாயகனாக நுழைந்தார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தயாரித்திருந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து படங்களிலும் நடிகராகவே நடித்துவந்தார். அந்த வகையில் இவருக்கு கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜோ (Joe) திரைப்படம் சூப்பர்ஹிட் வரவேற்பை கொடுத்தது. அதைத்தொடர்ந்து இறுதியாக இவரின் நடிப்பில் ஆண் பாவம் பொல்லாதது (Aan Paavam pollathathu) என்ற படம் வெளியானது. இப்படமானது திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது ரோம்-காம் கதைக்களத்தில் ராம் இன் லீலா (Ram In Leela) என்ற திரைப்படத்தில் இவர் நடித்துவருகிறார். இன்று 2026 பிப்ரவரி 17ம் தேதியில் ரியோ தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு ராம் இன் லீலா படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சாமியாடியாக நடிகர் சிவகார்த்திகேயன்… வெளியானது சேயோன் படத்தின் வீடியோ!

ரியோவின் ராம் இன் லீலா படக்குழு வெளிடியிட்ட பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர் பதிவு:

நடிகர் ரியோவின் ராம் இன் லீலா திரைப்படத்தில் இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கிவருகிறார். இவர் தமிழில் இவர் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான ஜெயம்கொண்டான் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இறுதியாக 2017ம் ஆண்டில் வெளியான இவன் தந்திரன் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். அந்த விதத்தில் தற்போது இவர் நடிகர் ரியோ ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ராம் லீலா என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ட்ரேடண்ட் தயாரிப்பு நிறுவனமானது தயாரிக்க, அன்கிட் மேனன் இசையமைத்துவருகிறார்.

இதையும் படிங்க: ஹரிஷ் கல்யாணின் தாஷமக்கான் படம் படத்திலிருந்து வெளியானது ராப் பேட்டில் லிரிக்கல் வீடியோ

இப்படத்தில் ரியோ ராஜிற்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்டிகா ஜெயின் நடித்துள்ளார். இந்த ராம் இன் லீலா திரைப்படமானது ரோம்-காம் கதைக்களத்தில் தயாராகிவருகிறது. ரியோவின் நடிப்பில் ஆண் பாவம் பொல்லாதது படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றநிலையில், இந்த ராம் இன் லீலா திரைப்படமும் சூப்பர் ஹிட் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை 2026ம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.