Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் 41வது பர்த்டே ஸ்பெஷல்! காமெடியன் டூ கலக்கல் ஹீரோ – சினிமா பயணம்!
Happy 41st Birthday Sivakarthikeyan: கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் இன்று 2026 பிப்ரவரி 17ம் தேதியில் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் சின்னத்திரையில் இருந்து, கதாநாயகனாக மாறிய இவரின் சினிமா பயணம் குறித்து பார்க்கலாம்.
தமிழில் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில், நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், போட்டியாளராகவும் பிரபலமாகிவந்தவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் கடந்த 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதியில் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தார். இவர் தந்தை போலீஸ் அதிகாரியாக இருந்தவர். போலீசில் பணியாற்றும்போது சிவகார்த்திகேயனின் தந்தை இறந்த நிலையில், தாய்மாமனின் அரவணைப்பில் வளர்ந்தார். ஆரம்பத்தில் சின்னத்திரை மக்கள் மத்தியில் இவர் பிரபலமான நிலையில், இயக்குநர் அட்லீயின் (Atlee) இயக்கத்தில் முகப்புத்தகம் (Mugaputhagam) என்ற குறும்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்தார். இதன் மூலம் இவருக்கு நடிப்பில் அதிகம் ஆர்வம் வந்தது. இவர் சினிமாவில் வருவதற்கு முன்னே அட்லீ, நெல்சன் திலீப்குமாருடன் (Nelson Dilipkumar) இணைந்து பணியாற்றியுள்ளார்.
அந்த விதத்தில் இவருக்கு சினிமாவில் முதல் படமாக அமைந்தது மெரினா (Marina). இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்கத்தில், கடந்த 2012ம் ஆண்டில் இப்படம் வெளியானது. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். சினிமாவின் ஆரம்பத்திலிருந்தே காமெடி ஜானரை தனது நடிப்பு மூலம் புகுத்தி மக்களை கவர்ந்துவந்தார்.
இதையும் படிங்க: பைசன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வைரலாகும் துருவ் விக்ரமின் அடுத்த படத்தின் அப்டேட்!




சினிமாவில் சிவகார்த்திகேயனின் முதல் வெற்றி :
இவருக்கு முதல் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சூரி, சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்திருந்தனர். 2013ம் ஆண்டில் இப்படம் வெளியானது. அதே ஆண்டில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான எதிர் நீச்சல் என்ற படமும் சூப்பர் ஹிட் வரவேற்பை கொடுத்தது. பின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் மான் கராத்தே படத்திலும் நடித்து ரசிக்கப்பட்டார்.
காமெடியை தொடர்ந்து காதல் – ஆக்ஷன் கதையில் சிவகார்த்திகேயன் :
ஆரம்பத்தில் காமெடி கதைக்களத்தில் நடித்துவந்த சிவகார்த்திகேயன், அதன்பின் காதல் கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். ரஜினிமுருகன், ரெமோ போன்ற படங்களின் மூலம் காதல் நாயகனாக ரசிக்கப்பட்டார். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஷன், விளையாட்டு மற்றும் திரில்லர் போன்ற படங்களிலும் நடித்தவந்தார். பின் தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்த இவர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த கனா திரைப்படத்தையும் தயாரித்து வெற்றிகண்டார்.
சிவகார்த்திகேயனின் தோல்வியும் – மக்களிடையே சம்பாதிக்கும் வெறுப்பும் :
சிவகார்த்திகேயன் தொடர்ந்து நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவந்த நிலையில், சில படங்கள் கைகொடுக்கவில்லை. மேலும் இவருக்கு சினிமாவில் பல அழுத்தம் கொடுப்பதாகவும் நிகழ்ச்சி மேடையில் வெளிப்படையாக கண்ணீர் விட்டிருந்தார். இவர் தற்போது பெரிய ஹீரோக்களுக்கு இணையாக பெரிய பட்ஜெட் படங்களிலும் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: ‘தி ராஜா சாப் பட ஆக்ஷன் காட்சியில் டூப்-பை பயன்படுத்தினேனா?’- மாளவிகா மோகன் ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு!
அதில் 2024ம் ஆண்டில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதையே தொடர நினைத்த சிவகார்த்திகேயனுக்கு மதராஸி மற்றும் பராசக்தி படங்களானது வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தது.
மீண்டும் வெற்றிக் கனியை எட்டுவாரா சிவகார்த்திகேயன் :
மேலும் தனது விடாமுயற்சியால் மீண்டும் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் கமல்ஹாசன் தயாரிப்பில், பேண்டஸி கதைக்களத்தில் சேயோன் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயன் தனது 41வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் புது படங்கள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகிவருகிறது.