AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Malavika Mohanan: ‘தி ராஜா சாப் பட ஆக்ஷன் காட்சியில் டூப்-பை பயன்படுத்தினேனா?’- மாளவிகா மோகன் ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு!

Malavika Mohanan on The Raja Saab Action: தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக கலக்கிவருபவர் மாளவிகா மோகனன். இவர் தி ராஜா சாப் படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் ஆக்ஷன் காட்சியில் இவர் டூப்-பை பயன்படுத்தியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Malavika Mohanan: ‘தி ராஜா சாப் பட ஆக்ஷன் காட்சியில் டூப்-பை பயன்படுத்தினேனா?’- மாளவிகா மோகன் ஆதாரத்துடன் வெளியிட்ட பதிவு!
மாளவிகா மோகன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Feb 2026 15:10 PM IST

கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் தி ராஜா சாப் (The Raja Saab). இப்படத்தில் தெலுங்கு நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் (Rebel Star Prabhas) நடித்திருந்தார். இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan), நிதி அகர்வால் (Nidhi Agarwal) மற்றும் ரித்தி குமார் உள்ளிட்ட மூலர் நடிகைகள் இணைந்து நடித்திருந்தனர். பேண்டஸி ஹாரர் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. மேலும் இப்படமானது தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு இருந்துவருகிறது. இயக்குநர் மாருதி (Maruthi) பேண்டஸி கதைகளத்த்தில் இயக்கியிருந்தாலும், இப்படத்தில் சரியான தொடர்ச்சி இல்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

இப்படத்தில் பிரபாஸிற்கு நிகராக நடிகை மாளவிகா மோகனனும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் அவரைப்போல உடையணிந்த டூப்-பை கொண்டு இந்த காட்சிகளை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை ஊடகங்களில் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து விளக்கமான பதிவை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட சூப்பர் அப்டேட் – காமெடியுடன் வெளியான புரோமோ இதோ!

தி ராஜா சாப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது குறித்து மாளவிகா மோகனன் விளக்கம் :

அந்த பதிவில் மாளவிகா மோகனன், “தி ராஜா சாப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளில், என்னைப்போலவே டூப்-பை பயன்படுத்தி எடுத்திருப்பதாக, வலைத்தளங்களில் கருத்துக்களை நான் கவனித்து வருகிறேன். எனக்கு ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பது மிகவும் பிடிக்கும். நானும் சிறுயதிலிருந்து விளையாட்டு வீராங்கனையாகவே வளர்ந்த்துவந்தேன். மேலும் என் உடலை உடல் ரீதியாக சவால் செய்வதையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதையும் நான் ரசிக்கிறேன். மேலும் படப்பிடிப்பில் நடிகர்கள் தங்கள் சொந்த ஸ்டண்ட்களைச் செய்யும்போது கூட, படப்பிடிப்புத் தளங்களில் எப்போதும் ஒரு ஸ்டண்ட் டபுள் இருக்கும்.

இதையும் படிங்க: ஸ்டேஜ்லயே உக்காந்துற வேண்டியதுதானே – பார்த்திபனை கிண்டல் செய்த சாய் பல்லவி!

ஏனெனில் அதிரடி இயக்குநர் அவர்களை லாஸ்ட் ஷாட்டை எடுக்க வைப்பதற்கு முன்பு, அவர்கள் நிபுணர்களாக இருப்பதால் ஷாட்டின் ஒத்திகைகளைச் செய்யச் சொல்கிறார். அதுபோல எனது ஆக்ஷன் காட்சிகளுக்கு நான் பயிற்சி எடுத்திருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பின்போது பயிற்சி எடுத்த காட்சிகள் மட்டும் BTS வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தி ராஜா சப் பட ஆக்ஷன் காட்சிகள் BTS வீடியோவை பகிர்ந்த மாளவிகா மோகனன்:

தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தி ராஜா சாப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இதையடுத்து நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கில் சில புது படங்களிலும் ஒப்பந்தமாகிவருகிறாராம். அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.