Atlee: தெறி படத்தில் நைனிகாவை நடிக்கவைக்க மீனா மேம் ஒத்துக்கல – அட்லீ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
Atlee Reveals Theri Nainika Casting Secret: பான் இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநராக இருப்பவர் அட்லீ. இவர் தமிழ் சினிமாவில் இருந்து தற்போது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் தனது காலடியை பதித்துவருகிறார். அந்த வகையில் தளபதி விஜய்யுடன் தெறி படத்தில், மீனாவின் மகள் நைனிகாவை எவ்வாறு நடிக்கவைத்தார் என்பது குறித்து அட்லீ மனம் திறந்துள்ளார்.
இந்திய சினிமாவில் தற்போது உச்ச இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் அட்லீ (Atlee). இவர் தமிழ் சினிமாவின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி, தற்போது பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் இயக்குநராக அசத்திவருகிறார். இவர் தளபதி விஜயை (Thalapathi Vijay) வைத்து மட்டுமே கிட்டத்தட்ட 3 படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தளபதி விஜய்யுடன் முதல் முதலில் இணைந்த திரைப்படம்தான் தெறி (Theri). இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக மெர்சல் (Mersel ) மற்றும் பிகில் (Bigil) போன்ற படங்களை இயக்கியும் ஹிட் கொடுத்திருந்தார். இவர் தற்போது தெலுங்கு நடிகராக அல்லு அர்ஜுனை வைத்து பான் இந்திய திரைப்படத்தை உருவாக்கிவருகிறார். இந்த படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் அட்லீ பிசியாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய இவர், தெறி படத்தில் மீனாவின் (Meena) மகள் நைனிகாவை (Nainika) எவ்வாறு நடிக்கவைத்தேன் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தெறி படத்தில் நைனிகாவை நடிக்கவைக்க முதலில் மீனா ஒத்துக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளர்.




இதையும் படிங்க: சினிமாவின் ஆரம்பத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பது டேஞ்சர்… காந்தாரா படம் குறித்து மனம் திறந்த ருக்மிணி வசந்த்!
இயக்குநர் அட்லீ வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
தெறி படத்தில் நைனிகாவை நடிக்க வைத்தது குறித்து இயக்குநர் அட்லீ பேச்சு :
முன்னதாக பேசியிருந்த நேர்காணலில் இயக்குநர் அட்லீ, ” முதலில் நான் மீனா மேமிடம் கேட்டபோது, நைனிகா வெறும் 4 வயது குழந்தை அவள் எப்படி விஜய் சாருக்கு மகளாக நடிப்பார் என என்னிடம் கேட்டார். உடனே நான் அவரிடம், நீங்கள் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் அவருக்கு மகளாக நடித்தது போல, நைனிகாவும் விஜய் சாருக்கு மகளாக நடிப்பார் என அவரிடம் கூறினேன். உடனே என்னை பார்த்த சிரித்தார்கள் . சிரித்த பிறகுதான் அவரிடம் நான் கூறினேன், முதலில் எனது அலுவலகத்தை வைத்து நைனிகாவை வைத்து சும்மா ஒரு சீன் எடுத்து காண்பிக்கிறேன்.
இதையும் படிங்க: பராசக்தி ஒரு அரசியல் படம் மட்டுமல்ல – இயக்குநர் சுதா கொங்கரா
அது உங்களுக்கு பிடித்திருந்தது என்றால், அவரை நடிக்க வைக்கலாம். இல்லையென்றால் வேண்டாம் என கூறினேன். உடனே மீனா மேம் ஓகே சொன்னாங்க. பின் எனது அலுவலகத்தில் வைத்து நைனிகாவை ஒரு 2 காட்சியில் நடிக்கவைத்தேன். அதை மீனா மேம் பார்த்து நன்றாக இருக்கிறது என கூறினார், பின் இதில் அவள் நன்றாக நடித்ததால், அதைப்போல ஷூட்டிங்கின்போது நடிப்பாராக என என்னிடம் கேட்டார். நானும் உடனே மேம் அது எனது பொறுப்பை, நான் நடிக்கவைக்கிறேன் என்று அவரிடம் நான் கூறினேன் என்று இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.