Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Devayani : அந்த விஷயத்தில் எனது பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் – மனம் திறந்த தேவயானி!

Devayani About Her Parents : தமிழ் சினிமாவில் இன்றுவரையில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருபவர்தான் தேவயானி. இவர் 90ஸ் காலகட்டத்தில் சிறந்த நடிகையாக படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் முன்னதாக பேசிய நேர்காணலில் தனது பெற்றோரை கஷ்டப்படுத்திய சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Devayani : அந்த விஷயத்தில் எனது பெற்றோரை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் – மனம் திறந்த தேவயானி!
தேவயானியின் குடும்பம் Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 01 Dec 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் 90ஸ் மற்றும் 20ஸ் தொடக்க காலத்தில் பிரபல நாயகியாக வலம்வந்தவர் தேவயானி (Devayani). இவர் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருந்துவந்தவர். இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சரத்குமார் (Sarathkumar) வரை பல்வேறு பிரபலங்களுடன் ஜோடியாக இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் முதல் படமாக அமைந்திருந்தது கடந்த 1993ம் ஆண்டில் வெளியான “ஷாட் பொன்சோமி” என்ற பெங்காலி படம். இந்த படத்தை அடுத்து, தென்னிந்திய சினிமாவில் மலையாளம் மொழியில் கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 1994ம் ஆண்டில் வெளியான கின்னரிபுழையோரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் தமிழில் இவருக்கு அறிமுக படமாக அமைந்ததுதான் தொட்டாசிணுங்கி (Thotta Chinungi). 1995ம் ஆண்டில் வெளியான இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

இந்த படங்களை அடுத்ததாக தமிழில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் இவர் இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன் (Raajakumaran) என்பவரை 2001ம் ஆண்டில் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய தேவயானி, அதில் இது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ராஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் படக்குழு… எப்போது ரிலீஸ் தெரியுமா

பெற்றோர் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை தேவயானி :

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் தேவயானியிடம், ” அந்த விதத்தில் உங்கள் பெற்றோர்களை நோகடித்த விஷயம் எதாவது இருக்கிறதா? என கேள்விக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த தேவயானி, “எனது பெற்றோர்களுக்கு தெரியாமல் நான் திருமணம் செய்த விஷயம் நிச்சயமாக அவர்களுக்கு கஷ்டமாக இருந்திருக்கும். கண்டிப்பாக அவர்களை கஷ்டப்படுத்தியிருக்கும்.

இதையும் படிங்க: சினிமாவில் எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை அதுதான்.. அதை சஞ்சயும் செய்ய வேண்டும் – தளபதி விஜய் பகிர்ந்த விஷயம்!

அந்த ஒரு விஷயத்தில்தான் எனது பெற்றோர்களை நான் மிகவும் காயப்படுத்தியிருக்கிறேன். அந்த விசயத்திற்கு பிறகு எனது பெற்றோர்கள் என்னை மன்னித்தனர். இப்போது என்னுடன் நன்றகத் பேசுகிறார்கள். இருந்தாலும் அந்த ஒரு விஷயத்தில் அவர்களை நான் மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன்” என அந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை தேவியணியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை தேவயானியின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள படம்தான் ஜீனி. நடிகர் ரவி மோகன் , க்ரித்தி ஷெட்டி மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2026ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.