Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் கொடுக்குமா? அவர் ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!

Suriya About Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் சூர்யா. இவர் தமிழை அடுத்தாக மற்ற மொழிகளிலும் படங்களின் கதையையும் தேர்ந்தெடுத்த நடித்துவருகிறார். இந்நிலையில் முன்பு ஒரு நேர்காணலில் பேசிய சூர்யா, சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

சிவகார்த்திகேயனுக்கு அட்வைஸ் கொடுக்குமா? அவர் ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!
சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Nov 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா (Suriya). சினிமாவில் இவர் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் இதுவரை 44 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இந்த படங்களை தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களிலும் சூர்யா நடித்துவருகிறார். இவர் தமிழ் மொழியை அடுத்ததாக தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி இயக்குநர்களுடனும் படங்களில் இணைந்துள்ளார். இவர் தனது ரசிகர்களுக்காக வித்தியாசமான முறையில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான “நேருக்கு நேர்” (Nerukku Ner) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் அவர் விஜய்யுடன் (Vijay) இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அடுத்ததாக தனி நாயகனாகவே படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அந்த வகையில் தற்போதுவரை நடித்துவரும் நிலையில் இவரின் நடிப்பில் கருப்பு என்ற படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த சூர்யா, நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) வளர்ச்சி பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன பேசியிருந்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: நான் எப்போது புத்துணர்ச்சியாக இருக்க.. காலையில் எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்வேன்- சமந்தா கொடுத்த டிப்ஸ்!

சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் சூர்யா சொன்ன கருத்து :

அந்த நேர்காணலில் சூர்யாவிடம் தொகுப்பாளர் டிடி , ” நீங்க எந்த புது நடிகருக்கு அட்வைஸ் கொடுப்பீங்க? அது யார்? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சூர்யா, ” எந்த நடிகருக்கும் அட்வைஸ் கொடுக்கும் அளவிற்கு நான் இல்லை. என்று தெரிவித்தார். பின் சிவகார்த்திகேயனின் பெயரை தொகுப்பாளர் கூறியிருந்தார். அது தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, ” சிவகார்திகேயனா அவரு கணக்கிட்டு இருக்காரு. சரியான படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கதை இப்படித்தான்.. விக்னேஷ் சிவன் சார் நிறைய கஷ்டப்பட்டிருக்காரு- கீர்த்தி ஷெட்டி!

மேலும் பலரும் அவரை நேசிக்கிறார்கள், அவர் படத்தில் என்ன பண்ணாலும், ரசிகர்கள் விருப்பப்படுகிறார்கள், அவரை ரசிக்கிறார்கள். மேலும் பெரியபெரிய படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கிவிட்டார். அவரை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அவருக்கு அட்வைஸ்லாம் பண்ண விரும்பவில்லை” என்று அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

கருப்பு படம் குறித்து சூர்யா பகிர்ந்த எக்ஸ் பதிவு :

நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் கூட்டணியில் உருவாகியுள்ள படம்தான் கருப்பு. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யா46 மற்றும் 46 போன்ற படங்களை சூர்யா தனது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.