சூர்யா- ஜோதிகாவுக்கு தூது போவதே என் வேலையா இருந்தது – கலகலப்பாக பேசிய நடிகர் ரமேஷ் கண்ணா!
Ramesh Khanna About Suriya Jyothika: தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துவருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா. இவர் சமீபத்தில் ப்ரண்ட்ஸ் பட ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர், சூர்யா மற்றும் ஜோதிகா காதலுக்கு தூது போன விஷயம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் படங்களில் துணை வேடத்தில் நடித்து மக்களுக்கு நெருக்கமானவர் ரமேஷ் கண்ணா (Ramesh Khanna). இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் நடிகர் சூர்யா (Suriya) வரை பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இவரின் நகைச்சுவைக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த வகையில் இவர் தொடர்ந்து தற்போதுவரை படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் பிரபலமான முக்கிய படங்கள் சாமி (Samy), ப்ரண்ட்ஸ் (Friends), காதல் மன்னன், நீ வருவாய் என என்று பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அந்த படங்களில் இவர் முக்கிய நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். இந்நிலையில் வரும் 2025 நவம்பர் 21ம் தேதியில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்த ப்ரண்ட்ஸ் படம் ரீ ரிலீஸாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட நடிகர் ரமேஷ் கண்ணா, இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நடந்த கலகல சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு (Jyothika) காதல் தூது சென்றது பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: திரையரங்க வெற்றி… சிம்பிளாக வெற்றிவிழாவை கொண்டாடிய காந்தா படக்குழு!
ப்ரண்ட்ஸ் பட ரீ ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :
View this post on Instagram
சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு காதல் தோத்து சென்றது குறித்து பேசிய ரமேஷ் கண்ணா :
அந்த நிகழ்ச்சியில் பேசிய ரமேஷ் கண்ணா, “ப்ரண்ட்ஸ் படம் மிகவும் அற்புதமான திரைப்படம். இந்த படத்தை பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது சூர்யாவும், நானும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக பழகிக்கொண்டிருந்தோம். இப்படத்தின் ஷூட்டிங் உளுந்தூர்பேட்டையில் நடந்தது, பின் கமல்ஹாசனின் தெனாலி படத்தின் ஷூட்டிங்கிற்காக கோயம்புத்தூர் சென்றேன். அந்த நேரத்தில் நான் மிகவும் பிஸியாகவே இருந்தேன்.
இதையும் படிங்க: சிறப்பான செயல்… தனது உதவி இயக்குநருக்கு புதிய கார் பரிசளித்த பிரதீப் ரங்கநாதன்!
ப்ரண்ட்ஸ் படத்தின் ஷூட்டிங் முடித்து, தெனாலி படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது சூர்யா என்னிடம், “ஜோதிகாவை கேட்டதாக கூறுங்கள்” என்று சொல்வார். நானும் தெனாலி பட ஷூட்டிங்கிற்கு சென்றதும் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து, ஜோதிகாவிடம் “சூர்யா உங்களை கேட்டார்” என கூறுவேன். அதற்கு ஜோதிகா, நன்றி என கூறி, தெனாலி ஷூட்டிங் முடித்து பின் ப்ரண்ட்ஸ் ஷூட்டிங் வரும்போது சூர்யாவை கேட்டதாக சொல்லுங்கள் என் என்னிடம் சொல்லுவார். நானும் சூர்யாவிடம் வந்து தங்கச்சி உன்னை கேட்டது என கூறுவேன். அவர்கள் இருவருக்கும் இது ரொம்ப சந்தோசமாக இருந்தது. இவர்களுக்கு தூது நான் தான்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.