இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடிகை நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் பிரிந்திருந்தாலும், தங்களின் மகன் அகஸ்த்யாவை வளர்ப்பதில் இருவரும் இணைந்து பொறுப்புடன் செயல்பட்டு வருவது ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தனது முன்னாள் மனைவி நடாசா மற்றும் மகன் அகஸ்த்யாவுக்காக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் சமீபத்தில் நடாசா தனது மகனுடன் புதிய சொகுசு காரின் அருகில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.