அடுத்தது தஞ்சை தான்.. விஜய் மக்கள் சந்திப்பா? நிர்வாகிகள் சந்திப்பா? வெளியான தகவல்..
பின்னர் டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார். 2025ஆம் ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூடப்பட்ட அரங்கில் மக்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் பொதுக்கூட்டம் மற்றும் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
பிப்ரவரி 27, 2026: சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் பரபரப்பாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரக்கூடிய மார்ச் மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றி கழகம் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இதற்கான பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்ட செயலாளர் கூட்டங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம்:
2025ஆம் ஆண்டு விஜய் தனது “தேர்தல்” சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். அப்போது திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
மேலும் படிக்க: திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி.. 35+2 கேட்டு காங்கிரஸ் பிடிவாதம்?..
பின்னர் டிசம்பர் மாதம் முதல் மீண்டும் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார். 2025ஆம் ஆண்டு இறுதியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூடப்பட்ட அரங்கில் மக்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஈரோட்டில் பொதுக்கூட்டம் மற்றும் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
வேலூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்:
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மக்களை சந்திக்கும் பணியில் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூரில் மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றப்பட்டது. 4,500 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால், ஒவ்வொரு நிர்வாகிக்கும் QR கோடு கொண்ட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. அதன் மூலம் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் நீடிக்கும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை இருக்கும்?
தஞ்சையில் மக்கள் சந்திப்பு:
இந்த நிலையில், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக கிட்டத்தட்ட மூன்று மாவட்டங்களில் மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக தஞ்சையில் மக்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இதற்கான இடத் தேர்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அனுமதி கோரி மாவட்ட கண்காணிப்பாளருக்கு விரைவில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.