Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Samantha: நான் எப்போது புத்துணர்ச்சியாக இருக்க.. காலையில் எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்வேன்- சமந்தா கொடுத்த டிப்ஸ்!

Samantha Morning Routine: தமிழ் சினிமாவிலும் சரி, தென்னிந்திய சினிமாவிலும் சரி மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் சமீபகாலமாகப் படங்களை நடிக்காமல் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் எப்போது பிரபலமாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா எப்பொழுதும் ஃப்ரெஷாக காலையில் மறக்காமல் செய்யும் விஷயம் பற்றிக் கூறியுள்ளார்.

Samantha: நான் எப்போது புத்துணர்ச்சியாக இருக்க.. காலையில் எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்வேன்- சமந்தா கொடுத்த டிப்ஸ்!
சமந்தா Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 25 Nov 2025 08:25 AM IST

இந்திய சினிமாவைப் பொறுத்தவை நடிகை சமந்தா ரூத் பிரபுவை (Samantha Ruth Prabhu) தெரியாத நபர்களை இருக்க முடியாது. நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நாயகியாக நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குஷி (Kushi) . கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், டோலிவுட் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு (Vijay Deverakonda) ஜோடியாக நடித்திருந்தார். காதல் மற்றும் ரோமேன்ஸ் போன்ற கதைக்களத்துடன் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்ததைவிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து உடல்நல குறைபாட்டின்காரணமாகப் படங்களில் நடிப்பதை தவிர்த்தது வந்தார். உடல்நல குறைபாட்டிலிருந்து சில மாதங்களில் நார்மல் நிலைக்குத் திரும்பிய சமந்தா, ஜிம் ஒர்கவுட், டயட் எனத் தனது உடல்நலத்தைப் பேண தொடங்கினார்.

அவ்வப்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் அதிக எடையைத் தூக்கும் வீடியோ, உடற்பயிற்சி செய்யும் வீடியோ என பலவற்றைப் பகிர்ந்து வருவார். இவர் படங்களிலும் சரி, நிகழ்ச்சிகளிலும் சரி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார். இந்த புத்துணர்ச்சிக்குக் காரணம் பற்றி நடிகை சமந்தா விளக்கியுள்ளார். அவர் காலையில் எழுத்துடன் (Samantha’s morning routine) மறக்காமல் செய்யும் விஷயங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க:டோலிவுட் சினிமாவில் ரௌடி நாயகன்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?

நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை சமந்தாவின் காலை ரோட்டின் :

நடிகை சமந்தா சொன்ன விஷயம் “நான் எப்போதும் கலியில் சுமார் 5:30 மணிக்கு சரியாக எழுந்துவிடுவேன், எழுந்தவுடன் காலைக் கடன் எல்லாம் முடித்திட்டுவிடுவேன். பின் அந்த நாளுக்காக நல்ல விஷயங்களை ஒரு காகிதத்தில் எழுதிவிடுவேன், நான் என்ன செய்யவேண்டும், எந்த விஷயங்களை நான் அந்த நாளில் முடிக்கவேண்டுமென்று எழுதுவேன். அதன் பிறகு நான் காலை வெயிலில் கொஞ்ச நேரம் நிற்பேன். அதைத் தொடர்ந்து மூச்சுப் பயிற்சியில் முழுவதும் ஈடுபடுவேன், அது எனக்கும் மிகவும் பிடிக்கும். அந்த நாளையே அது மிகவும் நிம்மதியாக்கிவிடும். பின் மெடிடேஷன் செய்வேன், சுமார் 25 நிமிடங்கள் என மெடிடேஷன் மறக்காமல் செய்வேன். இந்த விஷயங்களை நான் காலையில் மறக்காமல் செய்வேன். இந்த நல்ல பழக்கத்தை உருவாக்கிக்கொண்டாள் நிச்சயமாக வாழ்க்கையில் முன்னேறிச்செல்வதற்கான உத்வேகம் கிடைக்கும் என்று சமந்தா ரூத் பிரபு கூறியிருக்கிறார். இந்த விஷயங்களானது அன்றாடவாழ்வில் அனைவரும் செய்தால் உடலைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.

இதையும் படிங்க:  ஹீரோ லா உங்களுக்கு செட் ஆகாதுன்னு சொன்னாரு.. தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன்!

இந்த மாதிரியான உடற்பயிற்சிகளை மருத்துவர்களும் பரிந்துரைப்பது உண்டு. வளர்ந்து வரும் காலங்களில் மக்கள் நிற்கக்கூட நேரமில்லாமல் வேலைக்காக ஓடி உழைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையின் ஓட்டத்திற்காகவாவது இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்வது அவசியமானது.