Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டோலிவுட் சினிமாவில் ரௌடி நாயகன்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?

Can You Guess This Tollywood Star: தெலுங்கு சினிமாவில் ரசிகர்களாக ரௌடி என அழைக்கப்படுபவர். இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த சிறுவன் யார் என தெரிகிறதா?. இவர் தற்போது பல கோடி பட்ஜெட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருகிறார். இவர் பிரபல நடிகையின் காதலரும் கூட. யார் என்று விவரமாக பார்க்கலாம்.

டோலிவுட் சினிமாவில் ரௌடி நாயகன்.. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா?
டோலிவுட் நடிகர் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 Nov 2025 17:32 PM IST

தற்போது வளர்ந்துவரும் காலங்களில் மக்கள் அனைவரும் பல்வேறு விதமான மொழி திரைப்படங்களையும் பார்த்துவருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களை தமிழ் மக்களும் ஆர்வமுடன் பார்த்துவருகின்றனர். அந்த வகையில் இவர்களுக்கு அணைத்து மொழி நடிகர்களும் யார் யார் என தெரியும். இந்நிலையில் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் பல சிறுவர்கள் இருகிறார்கள். அதில் ஒரு டோலிவுட் நடிகரும் (Tollywood Actor) ஒளிந்திருக்கிறார். அது யார் என்று கண்டறியமுடிகிறதா?. இப்போது அவர் தென்னிந்திய பெண் ரசிகர்களின் கனவு நாயகனாக வளம் வருகிறார். சின்ன பட்ஜெட் படங்களில் ஆரம்பத்தில் நடித்துவந்த இவர், தற்போது ரூ 100 கோடிக்கும் மேல் உருவாக்கும் பட்ஜெட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.

மேலும் இவர் பான் இந்திய நடிகை ஒருவரின் நண்பரும், வருங்கால கணவரும் கூட. இப்போதாவது யார் என்று தெரிகிறதா?. இந்த சிறுவயது புகைப்படத்தில் இடதுபக்கம் கீழே அமர்ந்திருக்கும் சிறுவன் வேறுயாருமில்லை, டோலிவுட் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாதான் (Vijay Deverakonda). இந்த புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க:  பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் லிஸ்டில் இருப்பவர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ

நடிகர் விஜய் தேவரகொண்டா பகிர்ந்த அவரின் சிறுவயது தொடர்பான எக்ஸ் பதிவு :

நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக கிங்டம் என்ற படமானது வெளியானது. கடந்த 2025 ஜூலை 31ம் தேதியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை அடுத்ததாக இவர் VD15 என தற்காலிக டைட்டில் வைத்துள்ள படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் சமீபத்தில்தான் தொடங்கியிருந்தது.

விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படங்கள் :

இதையும் படிங்க: காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

மேலும் இந்த் படத்தை இயக்குநர் ரவி கிரண் கோல் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தயாரித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அறிவிப்புல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் அதிரடி ஆக்ஷ்ன் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.