எல்லாரும் சந்தேகமா சொன்னாங்களா.. அப்ப கண்டிப்பா பண்ணுறேன்- தாஷமக்கான் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பேச்சு!
Harish Kalyan About Dashamakan: நடிகர் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தில் படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் தாஷமக்கான். இப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஹரிஷ் கல்யாண ஓபனாக பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan). இவர் தமிழில் தொடர்ந்து வித்யாசமான கதைக்களத்தில் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் டீசல் (Diesel). இந்த படத்தை இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்க, ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வெளியான இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் 15வது படமாக உருவாக்குவதுதான் தாஷமக்கான் (Dashamakan). இப்படமானது ஆரம்பத்தில் HK15 என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2025 நவம்பர் 22ம் தேதியில் டைட்டில் டீசர் வெளியானது. இந்த படத்தை கவினின் லிப்ட் படத்தை இயக்கிய இயக்குநர் வினீத் வரப்ரசாத் (Vineeth Varaprasad) இயக்கி வருகிறார்.
இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் மாறுபட்ட கதையில் தயாராகிவருகிறது. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துவருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று 2025 நவம்பர் 22ம் தேதியில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் பேசிய ஹரிஷ் கல்யாண், தாஷமக்கான் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட காரணம் குறித்து மனம்திறந்துள்ளார்.




இதையும் படிங்க: காதல் ஒரு மென்மையான தென்றல் போல உணரும்போது… பராசக்தி படத்தில் இருந்து வெளியானது 2-வது சிங்கிள் புரோமோ – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தாஷமக்கான் திரைப்படத்தில் நடிக்க காரணமாக அமைந்த விஷயம் குறித்து மனம்திறந்த ஹரிஷ் கல்யாண் :
அந்த நிகழ்ச்சியின்போது தாஷமக்கான் படம் குறித்து பேசிய ஹரிஷ் கல்யாண், ” பலரும் நான் இந்த படத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கிட்டேன்னு கேட்டாங்க. இந்த படத்தில் நான் ராப்பர் வேடத்தில் நடிக்கிறேன். அதையெல்லாம் தாண்டி இந்த படத்தில் சிறப்பான விஷயம் ஒன்று இருக்கிறது. மேலும் இப்படத்தில் நிறைய லீட் விஷயங்கள் இருக்கிறது. அந்த விஷயம் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக பட்டது. அந்த விஷமானது மக்களிடையே சென்று சேரவேண்டும் என்பதை நான் எனது உள்ளார்ந்த மனதோடு நினைத்தேன், அதுதான் இந்த படத்தில் நான் நடிக்க ஒத்துக்கொண்டதற்கு முதல் காரணம்.
இதையும் படிங்க: காதல்தோல்வி கதாபாத்திரத்திற்கு என்னை அழைக்கிறீர்கள்? என் முகம் பார்க்க அப்படியா இருக்கு- தனுஷ் கலகல பேச்சு!
அடுத்ததாக இயக்குநர் வினீத் என்னிடம் கதை சொல்லும்போது, வருடம் கேட்டேன் “என்னால் இந்த கதாபாத்திரம் பண்ணமுடியுமா?, வேறு யாரிடமாவது இது குறித்து கேட்டீர்களா?” என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “எல்லாரும் சந்தகமாகத்தான் சொன்னாங்க” என்று அவர் என்னிடம் சொன்னார். “எல்லோரும் சந்தேகமாக சொன்னார்களா? எப்போது நான் இந்த வேடத்தில் நடிக்கிறேன்” என உடனே அவரிடம் கூறிவிட்டேன். மற்றவர்கள் நெல்லைப்பற்றி இவரால் இந்த வேடத்தில் நடிக்கமுடியாதது என்று கூறும்போதுதான், நாம் அந்த வேடத்தில் நடிக்கவேண்டும் என்ற ஒரு உத்வேகம் வரும்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
தாஷமக்கான் பட டைட்டில் ரிலீஸ் நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பேசிய வீடியோ பதிவு :
#HarishKalyan about #Dashamakan
– There’s some element more than the Rap culture in the film. I wanted to bring that to the people. 🙌
– The director said some had doubts and that only made me want to do this film even more strongly. 💪🔥pic.twitter.com/iKQTkTptjh— Movie Tamil (@_MovieTamil) November 23, 2025
நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரீத்தி முகுந்தனின் தாஷமக்கான் படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், விரைவில் தொடர்ந்து இப்படத்தின் புது அப்டேட்டுகள் வெளியாகும் என எதிராபர்க்கப்படுகிறது.