ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் படக்குழு – வைரலாகும் வீடியோ
Jana Nayagan Movie Audio Launch: ஜன நாயகன் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழாவில் விஜயை போற்று விதமாக அவரது பாடல்கள் கான்செட்டாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். இது தொடர்பாக அவர் அறிவிப்பை வெளியிட்டு தனது கட்சியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் (Actor Vijay) இறுதியாக ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் அது அவரது 69-வது படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தளபதி விஜயின் படம் தொடர்பான அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி மகிழ்ச்சியில் அவர்களை ஆழ்த்தி வந்தது. இந்த நிலையில் நடிகர் தளபதி விஜயின் 69-வது படமான ஜன நாயகன் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம் தெலுங்கு சினிமா உலகில் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் நிலையில் தமிழில் இந்த நிறுவனம் தயாரித்த முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் இறுதிப் படம் இது என்பதால் இந்த தயாரிப்பு நிறுவனம் விஜக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக பல விசயங்களை செய்து வருகின்றது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான போது விஜயின் முந்தைய படங்களின் காட்சிகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. அது விஜய் ரசிகர்களுக்கு மிகவும் எமோஷ்னலான விசயமாக இருந்தது. இப்படி ஒவ்வொரு அப்டேட்டும் ஜன நாயகன் படம் குறித்து அப்டேட் வெளியாகும் போதும் படக்குழு செய்து வருகின்றது.




ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ட்ரிபியூட்:
இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் 27-ம் தேதி ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு முன்னதாக வெளியான போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்த நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்க்கு ட்ரிபியூட் செய்யும் விதமாக அவரது நடிப்பில் முன்னதாக வெளியான பாடல்களை கான்செட்டாக பாட உள்ளதாக தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A live tribute concert celebrating the man, the music & the memories we grew up with ❤️
📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️@malikstreams
Travel Partner @gtholidays_ pic.twitter.com/tkSrkLtoRH
— KVN Productions (@KvnProductions) November 23, 2025
Also Read… ரவி மோகனின் படத்திற்கு ப்ரோ கோட் பெயரை பயன்படுத்த விதித்த தடை நீட்டிப்பு!