நடிகர் ஃபகத் பாசிலின் வித்யாசமான நடிப்பில் நார்த் 24 காதம் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
North 24 Kaatham Movie OTT Update: நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் முன்னதாக நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான நார்த் 24 காதம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி திரையரங்களில் வெளியான படம் நார்த் 24 காதம். இந்தப் படத்தை இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் நெடுமுடி வேணு, சுவாதி ரெட்டி, செம்பன் வினோத் ஜோஸ், சாதிக், முகுந்தன், தலைவாசல் விஜய், ஜினு ஜோசப், கீதா, ஸ்ரீநாத் பாசி, பிரேம்ஜி அமரன், கனி குஸ்ருதி, லியோனா லிஷோய், ஸ்ரீந்தா அர்ஹான், டிஸ்னி ஜேம்ஸ், நிர்மல் பாலாழி, காலித் ரஹ்மான், வி.பி. காலித், பிரிகி அபிகாயில் பெங்கர், பிரிவின் வினிஷ், சின்னு குருவிலா, புஷ்பா மேத்யூ, தீபக் நாதன், சுதி கொப்பா என பலர் இணைந்து நடித்து இருந்தனர்.
அட்வெஞ்சர் ட்ராமா பாணியில் வெளியாகி இருந்த இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான E4 என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர் சி. வி. சாரதி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்கள் ரெக்ஸ் விஜயன்
மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோர் இணைந்து இசையமைத்து இருந்தனர். மேலும் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
நார்த் 24 காதம் படத்தின் கதை என்ன?
நடிகர் ஃபகத் பாசில் ஐடி கம்பெனியில் பெரிய பதவியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே ஓசிடி என்ற மன நோய் உள்ளது. இந்த மன நோய் உள்ளவர்கள் மிகவும் சுத்தமாக இருப்பார்கள். இவர்கள் வாழும் இடத்தையும் தொடர்ந்து சுத்தம் செய்துக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட நோய் உடைய ஃபகத் பாசில் அலுவலக விசயம் காரணமாக ரயில் பயணத்தை மேற்கொள்கிறார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலை மிஸ்செய்த அவர் சாலை வழியாக தொடர்ந்து பயணிக்கிறார். அவருடன் நடிகை சுவாதி ரெட்டியும் இணைந்து பயணிக்கிறார். இந்த நிலையில் இவரது ஓசிடி பிரச்னை எல்லாம் கடந்து அவர் எப்படி பயணம் செய்தார் என்பதே படத்தின் கதை. இதில் நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



