Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னுடைய இசை வாழ்க்கையில் சிறந்த பாடல்களில் ஒன்று… பராசக்தி படத்தின் 2-வது பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

GV Prakash: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் வெற்றிநடைப் போடுகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவர் படங்களில் நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது இசையமைத்துவரும் பராசக்தி படம் குறித்து அப்டேட் அளித்துள்ளார்.

என்னுடைய இசை வாழ்க்கையில் சிறந்த பாடல்களில் ஒன்று… பராசக்தி படத்தின் 2-வது பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Nov 2025 12:06 PM IST

இந்திய சினிமாவில் ஆஸ்கர் நாயகனாக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரது அக்காவின் மகன் தான் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் (GV Prakash Kumar). இவர் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சிறு வயதில் இருக்கும் போதே சிக்குபுக்கு என்ற பாடலைப் பாடி தமிழக ரசிகர்களிடையே பிரபலம் ஆனார். தொடர்ந்து இசையை முறையாக கற்றுக்கொண்ட ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் வெளியான வெயில் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். இந்தப் படம் கிராமத்து பாணியில் உருவாக் இருந்த நிலையில் படத்தின் கதைக்கு ஏற்ற போல பாடல்களை மிகவும் சிறப்பாக இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தில் வெளியான அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக மாறினார் ஜிவி பிரகாஷ் குமார்.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தொடர்ந்து பலப் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் தொடர்ந்து வெளியாகும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது இசையில் வெளியான பாடல்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இரண்டு தேசிய விருதை பெற்றுள்ளார். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி அவ்வபோது படங்களிலும் நடித்து வருகிறார். இரண்டு வேலையிலும் பிசியாக இருக்கும் ஜிவி பிரகாஷ் குமார் தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்திற்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

என்னுடைய இசை வாழ்க்கையில் சிறந்த பாடல்களில் ஒன்று:

இந்தப் படம் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இரண்டாவது பாடல் குறித்து அப்டேட்டை ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார்.

அதில் எனது இசை வாழ்க்கையில் உருவான சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்த பராசக்தி படத்தில் இருந்து வெளியாகும் 2-வது பாடல் இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… யூடியூபில் பட்டையை கிளப்பும் சூர்யாவின் காட்மோட் பாடல்!

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அனுபமா பரமேசுவரனின் லாக்டவுன் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ