பராசக்தி படத்திற்காக பாடல் பாடிய யுவன் சங்கர் ராஜா – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
GV Prakash Kumar: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பராசக்தி படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக இவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடித்து இயக்கிய இட்லி கடை படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தின் உணர்வை மக்களிடையே இணைக்க இவரது பாடல்கள் மிகவும் உதவியாக இருந்தது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் பாடல்களை இசையமைத்து வருகிறார்.
இசையமைப்பாளராக முன்னிலை வகிக்கும் ஜிவி பிரகாஷ் குமார் அவ்வபோது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி, கவின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் மற்றும் சூர்யா 46, மண்டாட்டி, டி 54, மகுடம், டிகியூ 41 என பலப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.




பராசக்தி படத்திற்காக பாடல் பாடிய யுவன் சங்கர் ராஜா:
இந்த நிலையில் தற்போது பரசக்தி படத்திற்கு இசையமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஜிவி பிரகாஷ் குமார் தற்போது தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா உடன் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பராசக்தி படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்த பைசன் காலமாடன் – கொண்டாட்டத்தில் படக்குழு
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The legendary @thisisysr bro sings for #Parasakthi … here we gooooo 🔥🔥🔥#GV100 becomes more special ❤️@Sudha_Kongara pic.twitter.com/1mPeZuRAHa
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2025
Also Read… வானம் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா? 5 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் சூரரைப் போற்று படம்