சூர்யா 46 படத்தின் இசை குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்… மாஸான அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார்.
GV Prakash Kumar: நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் சூர்யா 46. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகின்றார். இந்த நிலையில் படத்தின் பாடல்கள் குறித்து ரசிகரின் கேள்விக்கு ஜிவி பிரகாஷ் சூப்பரான அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்கள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதன்படி சூர்யாவின் 45-வது படமான கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வீடியோ கடந்த 20-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து படம் விரைவில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக சூர்யாவின் 46-வது படம் குறித்த அப்டேட்டையும் தொடர்ந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதன்படி நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநரான இவர் தமிழில் நடிகர் தனுஷை வைத்து வாத்தி என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் வாத்தி படத்திற்காக தேசிய விருதையும் அவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




சூர்யா 46 படத்தின் பாடல்கள் எப்படி வந்துள்ளது?
அதன்படி இன்று பராசக்தி படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவின் கமெண்ட் பாக்ஸில் ரசிகர் ஒருவர் சூர்யா 46 படத்தின் பாடல்கள் குறித்து அப்டேட்டை ஜிவி பிரகாஷிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தாறுமாற வந்திருக்கு. இயக்குனர் மற்றும் ஹீரோ இருவருடனும் தேசிய விருது பெற்ற கூட்டணி என்று வாத்தி மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை குறிப்பிட்டு இருந்தார். அதன்படி முதலாவது தேசிய விருது நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிக்பாஸ் வீட்டில் கம்ருதின் – துஷார் இடையே கைகலப்பு – வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் ஜிவி பிரகாஷின் ரிப்ளை:
Andha suriya 46 songs epdi na vandhuruku @gvprakash edachi slunga
— IrumbuKaiPaari👊 (@_Ghajini_21) October 23, 2025
Also Read… Dude Movie: டியூட் பட வசூல் சாதனை… ஹாட்ரிக் வெற்றியை பெற்ற பிரதீப் ரங்கநாதன்!