Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோர்ட் ரூம் பாணியில் வெளியான இந்த நேரு படத்தை மிஸ் செய்யாதீர்கள்

Neru Movie OTT Update: மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் நேரு. கோர்ட் ரூம் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

கோர்ட் ரூம் பாணியில் வெளியான இந்த நேரு படத்தை மிஸ் செய்யாதீர்கள்
நேருImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Feb 2026 22:47 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் எந்த சினிமாவாக இருந்தாலும் கோர்ட் ரூம் ட்ராமாவாக வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் மலையாள சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் நேரு. கோர் ரூம் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை சாந்தி மாயாதேவி மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோர் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரு படத்தில் நடிகர் மம்முட்டி முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பிரியாமணி, சித்திக், அனஸ்வர ராஜன், ஜெகதீஷ், ஸ்ரீதன்யா, சங்கர் இந்துசூடன், கே.பி.கணேஷ் குமார், சாந்தி மாயாதேவி, ஆபிரகாம் ஜேக்கப், சபித்தா ஜார்ஜ், ஹரிதா ஜி. நாயர், மேத்யூ வர்கீஸ், பிரசாந்த் நாயர், ரேஷ்மா அனில், கிருஷ்ண பிரபா, காலேஷ் ராமானந்த், நந்து, தினேஷ் பிரபாகர், அர்பாஸ் அயூப், ஹரிகிருஷ்ணன், அதிதி ரவி, பூஜாப்புரா ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஹெப்பர், ஆண்டனி பெரும்பாவூர், சுரேஷ் பிள்ளை என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

மோகன்லால் நடிப்பில் வெளியான நேரு படத்தின் கதை என்ன?

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த நடிகை அனஸ்வரா ராஜனுக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருக்கிறது. இவருக்கு பார்வை இல்லை என்றாலும் தொடுதல் உணர்வில் அனைவரையும் சிலையாக செய்யும் திறமை கொண்டவராக இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் வீட்டில் யாரும் இல்லாமல் அனஸ்வரா தனியாக இருந்தபோது மும்பையில் பெரிய தொழிலளிபதிரின் மகனாக சங்கர் இந்துசூடன் அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறார். இது தொடர்பாக அனஸ்வராவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்கின்ற்னார்.

Also Read… ஜன நாயகன் படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கமா? – தயாரிப்பாளர் தனஞ்செயன் அதிரடி பதிவு!

இவர்களின் வழக்கை வாதாடுவதற்காக வழக்கறிஞராக மோகன்லால் வருகிறார். ஆனால் சங்கர் இந்துசூடன் குடும்பத்தினர் மிகப் பெரிய பணக்காரர்கள் என்பதால் வழக்கில் உள்ள அனைத்து சாட்சிகளையும் அளிக்கிறார்கள். இவற்றை எல்லாம் முறியடித்து மோகன்லால் எப்படி பார்வையற்ற பெண்ணிற்கு நீதியை வாங்கி தருகிறார் என்பதே இந்த நேரு படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இந்த புகைப்படத்தில் இருக்கும் சகோதரர்கள் யாருனு தெரியுமா? இவர்கள் கூட்டணியில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது!