Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

HBD Silambarasan: ஹேப்பி பர்த்டே சிலம்பரசன்! லிட்டில் ஸ்டார் முதல் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனான பயணம்!

Silambarasans 43rd Birthday: தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து, நாயகனாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் பயணம் செய்துவருபவர் சிலம்பரசன். இவர் இன்று 2026 பிப்ரவரி 3ம் தேதியில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இவர் கடந்துவந்த பாதைகள் குறித்து பார்க்கலாம்.

HBD Silambarasan: ஹேப்பி பர்த்டே சிலம்பரசன்! லிட்டில் ஸ்டார் முதல் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனான பயணம்!
சிலம்பரசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Feb 2026 12:06 PM IST

கோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் சிலம்பரசன் (Silambarasan). இவருக்கு தமிழ் சினிமாவில் பல ரசிகர்கள் இருந்துவருகின்றனர். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது லீட் கதாநாயகனாக படங்களில் நடித்து கலக்கிவருகிறார். இவர் இவர் தமிழ் சினிமாவில் தனது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் (T. Rajender) மகன் ஆவார். இவர் கடந்த 1984ம் ஆண்டில் வெளியான “உறவை காத்த கிளி” (Uravai Kaatha Kili) என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். தனது 3 வயது முதலே சினிமாவில் தனது நடிப்பை தொடங்கிய சிலம்பரசன், தற்போது சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக ஆரம்பத்தில் மக்களிடையே பிரபலமான இவர், கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் தி.ராஜேந்தரின் இயக்கத்தில் வெளியான “காதல் அழிவதில்லை” (Kadhal Azhivathillai) என்ற படத்தின் மூலம் லீட் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் நடிகை சார்மி கவுருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நாயகனாக நடித்துவந்தார்.

இதையும் படிங்க: சியான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்!

கதாநாயகன் முதல் இயக்குநராக சிலம்பரசன் :

சிலம்பரசன் சினிமாவின் தொடக்கத்தில் கதாநாயகனாகவே படங்களில் நடித்துவந்த நிலையில், தொடர்ந்து தனது தந்தை தி.ராஜேந்திரனை போலவே திரைப்படத்தை இயக்கும் ஆசையும் அவருக்கு வந்தது. இவருக்கு கடந்த 2004ம் ஆண்டில் வெளியான மன்மதன் என்ற படத்தின் மூலம் இவருக்கு இயக்குவதில் ஆர்வம் அதிகரித்தது. இப்படத்தை இயக்குநர் ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தலும், சிலம்பரசனும் சில காட்சிகளை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகே வல்லவன் என்ற திரைப்படத்தை இயக்கும் முடிவை சிலம்பரசன் எடுத்தார்.

கடந்த 2006ம் ஆண்டில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், இதில் நயன்தாரா ஏமாற்றும் ரீமா சென் போன்ற நடிகைகளுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்த சிலம்பரசன் அப்போது சென்சேஷனல் நாயகனாக பிரபலமானார். ஆனாலும் இவருக்கு இப்படம் கலவையான விமர்சனங்களையே கொடுத்திருந்தது.இதற்கு பின் அவர் பெரிதும் எந்த படத்தையும் இயக்கவில்லை.

சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு :

நடிகர் டூ ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் :

நடிகர் சிலம்பரசன் பொதுவாக அவரின் படத்தின் நிகழ்ச்சி மேடையில் பேசுவது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த நிகழ்ச்சி மேடையில் அவர் பேசும் நிறைய விஷயங்கள் தற்போதுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படுவது உண்டு. சிலம்பரசன் சினிமாவில் பல நடிகைகளை காதலித்து பின், அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது வரையில் சிங்கிளாக இருந்துவருகிறார். மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தற்போது சிலம்பரசன் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: எனது பியூட்டி சீக்ரெட் இதுதான்.. நடிகை சாய் பல்லவி சொன்ன ரகசியம்!

மேலும் STR50, STR51 போன்ற படங்களிலும் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் சிலம்பரசன் டி.ஆர், இன்று 2026 பிப்ரவரி 3ம் தேதியில் தனது 43வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.