சியான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.. துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் அப்டேட்!
Dhruva Natchathiram Release Update: தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்து தற்போது நடிகராகவும் படங்களில் நடித்துவருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சினிமாவில் நுழைந்து 25 வருடத்தை கடந்த நிலையில், சமீபத்தில் விழா ஒன்று நடைபெற்றிருந்தது. அதில் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் (Gautham Vasudev Menon) தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சிறந்த இயக்குநராகவும், நடிகர்களில் ஒருவராகவும் இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் பல்வேறு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக சூர்யாவுடன் (Suriya) படங்களில் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை இவர் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் தற்போது நடிகராக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பல படங்களில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்ககளிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவர் சினிமாவில் கடந்த 2001ம் ஆண்டில் வெளியான மின்னலே (Minnale) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதை கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் விழா ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இந்த விழாவில் நடிகர் சூர்யா முதல் பல்வேறு பிரபலங்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், தனது இயக்கத்தில் வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் (Dhruva Natchathiram) படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: எழுத்தாளர் தமிழ் பிரபா உடன் இணையும் ஹரிஷ் கல்யாண் – வைரலாகும் தகவல்
துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் பேச்சு :
அந்த நிகழ்ச்சியின்போது பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், “நிதிச் சிக்கலின் காரணமாக துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தாமதமானது. அந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கே சில ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இறுதிக்கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன். இந்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதியை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க முடியும் என நம்புகிறேன். இப்படத்தை நிச்சயமாக வெளியிடவேண்டும் என்ற காரணத்திற்காகவே, நான் வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை” என அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
சூர்யாவுடன் நடனமாடிய கௌதம் வாசுதேவ் மேனனின் வீடியோ பதிவு:
#Suriya × #GowthamMenon × “Ava Enna Enna Thedi Vandha Anjala” = Goosebumps 🤩🔥
Unforgettable moment at GVM’s 25-year celebration.#Karuppu
pic.twitter.com/fROB38azQw— Movie Tamil (@_MovieTamil) February 2, 2026
சியான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் :
நடிகர் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது வர்மாவின் கூட்டணியில் உருவாகியிருந்த படம்தான் துருவ நட்சத்திரம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். இப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், சில காரணங்களால் அவர் இதிலிருந்து விலகினார். பின் இப்படத்தில் நடிகர் சியான விக்ரம் நடித்துவந்தார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள நிலையில், கடந்த 2023ம் ஆண்டிலே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தனுஷின் டி55 படத்தின் இணைந்த சாய் பல்லவி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பின் ரிலீஸாகுவதற்கு ஒரு நாள் முன்பே இப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். அதிலிருந்து இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், தற்போது அது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.