AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

டிடிஃஎப் வாசனுக்கு ஆதராக பேசிய முனியம்மாள் – காண்டாக்கி பேசினாய் பிருத்வி – ஜேசன்!

Bigg Boss Tamil 10 Ticket to Finale: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. தற்போது நடைபெற்றுவரும் கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில், முனியம்மாள், டிடிஃஎப் வாசன் மற்றும் சாதிகா என மூவர் மட்டும் இருக்கிறார்கள். பிருத்வியை போட்டுத்தள்ளிய வாசனுக்கு முனியம்மாள் ஆதரவாக பேசியிருந்த நிலையில், அவரை எதிர்த்து ஜேசன் மற்றும் பிருத்வி பேசிய ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

டிடிஃஎப் வாசனுக்கு ஆதராக பேசிய முனியம்மாள் – காண்டாக்கி பேசினாய் பிருத்வி – ஜேசன்!
பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Nov 2026 17:32 PM IST

மக்கள் மத்தியில் தமிழில் வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் நிலையில், 11வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது ஆரம்பமாகி 75 நாட்களான நிலையில், இந்த வாரம் தொடக்கத்திலிருந்து டிக்கெட் டூ ஃபினாலே-கான (Ticket to the Finale) டாஸ்குகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அந்த விதத்தில் கடந்த 2 நாட்களாக கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், இந்த டாஸ்கிங் இறுதியில் சாதிகா, முனியம்மாள், பிருத்வி மற்றும் டிடிஃஎப் வாசன் என 4 பேர் இருந்தனர். இந்நிலையில் தன்னை கான்ட்ராக்ட் கில்லாடியாக தேர்ந்தெடுத்த பிருத்வியையே டிடிஃஎப் வாசன் சுட்ட நிலையில், அவர் பயங்கரமான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் அவருடன் இணைந்து ஜேசனும், டிடிஃஎப் வாசன்-ஐ பார்த்து நீ கேவலமாக விளையாடுற என கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு முனியம்மாள், டிடிஃஎப் வாசன் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள் என கூறினார். இந்நிலையில் முனியம்மாள் வாசனுக்கு ஆதரவாக பேசிய நிலையில், அவரை எதிர்த்து ஜேசன் மற்றும் பிருத்வி பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: போய் கண்ணாடிய பாரு மேன்… பிக் பாஸில் டிடிஃஎப் வாசனின் கேம் பிளே-வால் காண்டான பிருத்வி – ஜேசன்!

முனியம்மாளை கார்னர் செய்து பேசிய ஜேசன் மற்றும் பிருத்வி:

இந்த ப்ரோமோவில், கிச்சனில் சமைத்துக்கொண்டிருந்த முனியம்மாளிடம், பிருத்வி “முனி இதுவே உன்னை வாசன் கொன்றிருந்தால்.. எப்படி பேசுவாய் என இந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரியும்” என கூறினார். உடனே முனியம்மாள், அடுத்தவன் உன்னை கொள்ளப்போகிறான் என தெரிந்ததும், யாராக இருந்தாலும் அவனைத்தான் முதலில் கொள்வான்” என கூறினார்.

இதையும் படிங்க: என் வாழ்வின் காதலை.. தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்த அஸ்வின் குமார்!

அதன் பிறகு வந்து பேசிய ஜேசன், “இங்கிருக்கும் எல்லாருக்குமே கோல்மால் செய்து விளையாட தெரியும்.. இங்கிருக்கும் எல்லாருக்குமே அடித்து பிடிங்கி விளையாட தெரியும்.. சண்டையிட்டு விளையாடவும் தெரியும். எல்லாமே பண்ணவும் தெரியும். அவரின் கைதட்டல் உனக்கு வேண்டுமென்றால் தனியாக போய் அவரிடம் (டிடிஃஎப் வாசன்) பேசு. அவரை எதிர்ப்பவர்கள் கைதட்டல் வேண்டுமென்றால் அவரை எதிர்த்து தனியாக பேசு. உன்னுடைய ஆட்டத்தை தனியாக வைச்சிக்கோ” என அதில் அவர் கூறியிருந்தார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 75வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:

இந்த நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே கான்ட்ராக்ட் கில்லாடி டாஸ்கில், வாசன், முனியம்மாள் மற்றும் சாதிகா என மூவர் மட்டுமே மீதம் இருகிறார்கள். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டியில் யார் வெற்றிபெறுவார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow Us