என்னப்பா ரெடியா? பிக் பாஸில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் நீலாம்பரி?
Ramya Krishnan Bigg Boss Host: தமிழில் பிக் பிக் பாஸ் சீசன் 10 என்ற ரியாலிட்டி ஷோ மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு முன் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கியிருந்தார். அந்த விதத்தில் இந்த வாரத்திலும் அவர் தொகுத்துவாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் டிவியில் (Vijay Tv) சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவரும் நிலையில், கிட்டத்தட்ட 10 வாரங்களை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. தமிழில் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியானது 2026 செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கிய நிலையில், தற்போது 11வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில், தற்போது டிக்கெட் டூ ஃபினாலே போட்டிக்கான டாஸ்குகள் சிறப்பாக நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சிறப்பாக தொகுத்து வந்தாலும், இந்நிகழ்ச்சி தொடங்கி 5வது வாரத்தில் விஜய் சேதுபதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருந்தார்.
அதனால் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுத்து வழங்கியிருந்தார். அந்த வாரத்தின் இறுதி சிறப்பாக அமைந்திருந்தது. தற்போது இந்த வாரத்திலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக தொகுத்துவாங்கவுள்ளாராம். இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: அரசன் படத்திலிருந்து அனிருத் விலகிட்டாரா? தயாரிப்பாளர் விளக்கம்!
மீண்டும் பிக் பாஸில் தொகுப்பாளராக இணைகிறாரா ரம்யா கிருஷ்ணன்:
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சில வாரங்களில் தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார். கடந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் அவர் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 5வது வாரத்தில் ரம்யா கிருஷ்ணன் தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
இதையும் படிங்க: ஃபினாலே வாரப் போட்டியில் மற்றொரு டாஸ்க்.. அதிரடியாக வெளியேறிய போட்டியாளர்கள் – ப்ரோமோ இதோ!
அவர் தொகுத்து வழங்கியிருந்த அந்த வாரம் நிஜமாகவே அனல் பறந்தது. ஜேசன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இடையே கடுமையான வாக்குவாதம் இருந்தது. அந்த விதத்தில் மீண்டும் தற்போது இந்த வாரத்திலும், ரம்யா கிருஷ்ணன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மையான தகவல்கள் என தெரியவில்லை. இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரம்யா கிருஷ்ணன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:
View this post on Instagram
தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாக நடந்துவருகிறது. இந்த நிகழ்ச்சியானது 11வது வாரத்தின் இறுதியில் உள்ள நிலையில், இந்த வாரத்திலும் எவிக்ஷன் உள்ள நிலையில், ப்ரித்வி அல்லது முகேஷ் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்த தகவலால் விரைவில் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.