AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம்..

Voter List Special Camp: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தங்களது வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்து, தேவையான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 21 Nov 2026 08:24 AM IST

நவம்பர் 21, 2026: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் (நவம்பர் 21, 22) சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5.77 கோடி வாக்காளர்கள்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த நவம்பர் 12ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 5.77 கோடி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமாகி 40 நாட்கள்.. தீர்வு வேண்டி காவல் நிலையத்தில் சிறப்பு கணபதி ஹோமம் செய்த ஆய்வாளர்!

இதில் 2.82 கோடி ஆண் வாக்காளர்களும், 2.95 கோடி பெண் வாக்காளர்களும், 70,892 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதில் இடம்பெற்றுள்ள விவரங்களைச் சரிபார்த்து பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தங்களது வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்து, தேவையான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். குறிப்பாக வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மற்றும் ECINET மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

18 வயது பூர்த்தியடைவோருக்கு வாய்ப்பு!

2027ஆம் ஆண்டு ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தகுதி தேதிகளில் 18 வயது பூர்த்தியடைவோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்த வேண்டும்.

அதேபோல், ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர் அல்லது பிற விவரங்களில் திருத்தம் செய்யவும், முகவரி மாற்றம் மேற்கொள்ளவும் உரிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். பெயர் நீக்கம் செய்ய வேண்டியவர்களும் அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

மேலும் படிக்க: சென்னை புறநகர் மின்சார ரயில்கள் 2 நாட்களுக்கு பகுதி நேரமாக ரத்து! நவம்பர் 21, 24-ல் சேவையில் மாற்றம்..

எனவே, பொதுமக்கள் தங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, விடுபட்டிருந்தால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us