SIR (சிறப்பு தீவிர திருத்தம்)
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்தியது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 12 மாநிலங்களில் SIR உத்தரவிடப்பட்டது. சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) நோக்கம், வாக்காளர் பட்டியலை மிகவும் வெளிப்படையானதாகவும் துல்லியமாகவும் மாற்றுவதும், போலி அல்லது நகல் உள்ளீடுகளை நீக்குவதும் ஆகும். இது ஒவ்வொரு தனிநபரின் அடையாளம் மற்றும் குடியுரிமையை சரிபார்ப்பதை உறுதி செய்யும். உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆதார் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் என்பது குடியுரிமைக்கான சான்றாக அல்ல, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. முதல் கட்டத்தில், SIR (சிறப்பு தீவிர மதிப்பாய்வு) பீகாரில் மட்டுமே நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டம் 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படுகிறது: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை ஆகும்.
தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்.. மீண்டும் விண்ணப்பிப்பது எப்படி?
கணக்கெடுப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 பெயர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியலுக்கு எதிராக 19.12.2025 முதல் 30.01.2026 வரை ஏற்புரைகள் மற்றும் மறுரைப்புரைகள் பெறப்பட்டன. அந்த காலப்பகுதியில் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதுடன், 4.23 லட்சம் தகுதியற்ற நபர்கள் நீக்கப்பட்டனர்.
- Aarthi Govindaraman
- Updated on: Feb 23, 2026
- 15:46 pm IST
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
Final voter list: காஞ்சிபுரத்தில் ஆண்கள் 5,78,080, பெண்கள் 6,13,917, மூன்றாம் பாலினத்தவர் 197, மொத்தம் 11,92,194 வாக்காளர் உள்ளனர். விருதுநகர் வாக்காளர்கள் எண்ணிக்கை- 14,97,417. ஆண்கள்- 7,28,539, பெண்கள்- 7,68,62. தருமபுரியில் ஆண்கள் 6,24,647, பெண்கள் 6,15,311, மூன்றாம் பாலினத்தவர் 150 என மொத்தம் 12,40,108 வாக்காளர்கள் உள்ளனர்
- esakkiraja selvarathinam
- Updated on: Feb 23, 2026
- 13:02 pm IST
எஸ்ஐஆர் பணிகள் தாமதமாகக் கூடாது – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஏற்படும் தடைகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்து தீர்வு காணும் என்றும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறுவதில் எந்தவிதத் தடையும் அனுமதிக்கப்படாது. இது அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவாக இருக்க வேண்டும் உச்சநீதிமன்றம் நீதிபதி சூர்யகாந்த் உத்தரவிட்டார்.
- Karthikeyan S
- Updated on: Feb 9, 2026
- 22:40 pm IST
தமிழக வாக்காளர் பட்டியலில் சேர ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்.. 22 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பம்..
பெயர்கள் நீக்கப்பட்ட 66.45 லட்சம் பேரில், 19.5 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் விண்ணப்பித்துள்ளனர். சுமார் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
- esakkiraja selvarathinam
- Updated on: Jan 31, 2026
- 07:24 am IST
SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்
SIR Work Last Day: ஜனவரி 30, 2026 ஆம் தேதி வரை பெயர் சேர்க்க கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், படிவம் 6 பயன்படுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 30, 2026
- 07:43 am IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 நாட்கள் அவகாசம் – திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
Voter list extension : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான அலுவலர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jan 29, 2026
- 16:56 pm IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு…தமிழகத்தில் 15 லட்சம் பேர் விண்ணப்பம்!
Tamilnadu Voter List: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 15 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அடுத்த மாதம் பிப்ரவரியில் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
- Gowtham Kannan
- Updated on: Jan 26, 2026
- 10:42 am IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாம்..
SIR - Special Camp: ஜனவரி 18ஆம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பலரும் விண்ணப்பிக்காத நிலையில், இந்த கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதாவது, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 24, 2026
- 10:45 am IST
பொதுமக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு…சென்னையில் 2 நாள்கள் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்!
Special Voter Registration Camp : சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை சேர்த்து கொள்ளலாம் .
- Gowtham Kannan
- Updated on: Jan 20, 2026
- 07:51 am IST
எஸ்ஐஆர் விவகாரம்… உச்சநீதிமன்றம் சென்ற தவெக – என்ன காரணம்?
TVK Moves Supreme Court : தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ள ஜனவரி 30, 2026 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
- Karthikeyan S
- Updated on: Jan 19, 2026
- 20:06 pm IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை கால அவகாசம் நீடிப்பு.. தேர்தல் ஆணையம்..
SIR: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் 2025 நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 19, 2026
- 12:12 pm IST
நிறைவடைந்த SIR பணிகள்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்..
SIR - Tamil Nadu: அடுத்த மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருக்கும் சூழலில், மக்கள் படிவம் 6 பயன்படுத்தி விண்ணப்பிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஜனவரி 18ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டது.
- Aarthi Govindaraman
- Updated on: Jan 19, 2026
- 06:40 am IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவில்லையா…இன்றுடன் நிறைவடைகிறது கால அவகாசம்!
Tamil Nadu Voter List: தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, பெயர் சேர்க்காத வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பூத் லெவல் அதிகாரியிடம் சமரப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
- Gowtham Kannan
- Updated on: Jan 18, 2026
- 07:25 am IST
நாளையுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணிகள்… வாக்காளர்களுக்கு எச்சரிக்கை
Voter List Update: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஜனவரி 18, 2026 அன்றுடன் முடிவடைவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- Karthikeyan S
- Updated on: Jan 17, 2026
- 16:41 pm IST
சென்னையில் இரு நாள்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்…மாநகராட்சி அறிவிப்பு!
Voter List Revision Camp In Chennai: சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில், பல்வேறு கோரிக்கைகளை படிவங்களை சமர்ப்பித்து பயன் பெறலாம் .
- Gowtham Kannan
- Updated on: Jan 8, 2026
- 16:41 pm IST