வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 நாட்கள் அவகாசம் – திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
Voter list extension : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான அலுவலர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ஜனவரி 29 : தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் (Voters List) இருந்து பெயர்கள் விடுபட்டுள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் (Supreme Court)உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான அலுவலர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், தமிழகத்தில் பலரின் பெயர்கள் தவறுதலாக விடுபட்டுள்ளதாகவும், இதனால் வாக்குரிமை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத்தில் திமுக மனு
தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பதிவு செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 30, 2026 அன்றுடன் முடிவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக வாக்காளர்களுக்காக மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்மான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிக்க : தவெக 3- ஆம் ஆண்டு தொடக்க விழா…சென்னையில் 2- ஆம் தேதி நடைபெறுகிறது…பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!




தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவில், வாக்காளர் பட்டியலில் பெரும் எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான கால அவகாசம் போதுமானதா என்ற கேள்வியை தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தது. இந்த நிலையில் ஜனவரி 29, 2026 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் வாக்காளர் பதிவு செய்ய மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவர்களின் பெயர் விவரங்களை ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வெளியிட வேண்டும் என்றும் , வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள தேவையான அலுவலர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 18 வயதுள்ள புதிய வாக்காளர்களின் பெயர் சேர்க்க கடந்த டிசம்பர் 19, 2025 முதல் ஜனவரி 18, 2026 வரை 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் ஜனவரி 30, 2026 அன்றுடன் முடிவடையும் நிலையில், திமுக மேலும் 10 நாட்கள் நீடித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.