தினமும் ரூ.3 லட்சம் மருத்துவ கட்டணம்.. போருக்கு மத்தியில் துபாயில் தாயை காப்பாற்ற போராடு மகன்!
Man Struggling To Save Mother For Illness | தமிழகத்தை சேர்ந்த திலக் குமார் என்ற நபர் குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயை காப்பாற்ற போருக்கு மத்தியில் போராடி வருகிறார்.
துபாய், மார்ச் 16 : துபாய் (Dubai) பலருக்கும் புது வாழ்க்கை கொடுக்கும் பகுதியாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமானவர்கள் துபாய்க்கு வேலைக்கு சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். அந்த வகையில், புது வாழ்க்கை தேடி தமிழ்நாட்டில் (Tamil Nadu) இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற நபர் ஒருவர் தற்போது தனது தாயின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். துபாயில் தாயின் உயிரை காப்பாற்ற போராடும் மகனின் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
போருக்கு மத்தியில் தாயின் உயிரை காப்பாற்ற போராடும் மகன்
தமிழகத்தை சேர்ந்தவர்கள் திலக் குமார் மற்றும் அவரது மனைவி ஷாமினி ரமேஷ். இவர்கள் தமிழகத்தில் இருந்து கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக துபாய்க்கு சென்றுள்ளனர். அவர்கள் பிள்ளைகளுடன் அங்கேயே வசித்து வரும் நிலையில், திலக் குமாரின் தாயார் அவர்களை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : நேபாளத்தில் நடைபெற்ற கோர விபத்து – தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி – பலர் படுகாயம்




அந்த மருத்துவமனையில் ஒரு நாளுக்கு ரூ.3 லட்சம் கட்டணம் விதிக்கப்படும் நிலையில், அவர்கள் சொல்லும் காலம் வரை மருத்துவம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது 1.25 கோடி செலவாகும். ஆனால், மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் திலக் குமாரால் அவ்வளவு தொகையை செலுத்துவது மிகவும் கடினமானது ஆகும். இந்தியாவில் மருத்துவம் பார்த்தால் இத்தகைய பெரிய தொகையை செலுத்த வேண்டிய நிலை இருக்காது என்பதால் திலக்குமார் மற்றும் அவரது மனைவி இணைந்து தாயை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே ஒரே வழி
அவர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவரது தாயை இந்தியா அனுப்பி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். மார்ச் 04, 2026 அவர் இந்தியா வருவதாக இருந்த நிலையில், போர் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தனியார் ஏர் ஆம்புலன்ஸ் மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியாக உள்ளது. ஆனால், ஏர் ஆம்புலன்ஸ் வைப்பதற்கு ரூ.50 லட்சம் செலவாகும். இந்த நிலையில், திலக் குமார் மற்றும் அவரது மனைவி பொதுமக்களிடம் உதவி கேட்டு வருகின்றனர்.
திலக் குமார் வங்கி கணக்கு விவரம்
- Name : Thilak Kumar Jalathu Aniruthraja
- IBAN : AE410030000709918217001
- Account : 709918217001
- Bank : ABCD
- Branch : IBD – KHALED BIN WALEED STREET
- SWIFT Code : ADCBAEAA