Suriya: 20 வயது வித்தியாசத்திலும் காதல்… வெளியானது சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர்!
Vishwanath And Sons Movie Teaser: தென்னிந்திய பிரபல இயக்குநர் வெங்கி அட்லாரியின் இயக்கத்தில், சூர்யா முன்னணி நாயகனாக நடித்துள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இறுதிக்கட்ட வேலைப்பாடுகளில் இருக்கிறது. அந்த வகையில் இன்று 2026 மார்ச் 16ம் தேதியில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா (Suriya) மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” (Vishwanath And Sons). இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த ஜோடியானது ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் முதல் முதலில் நடிக்கவிருந்த நிலையில், பின் சூர்யா விலகியதும் அதிலிருந்து மமிதா பைஜூவும் விலகிவிட்டார். அந்த வகையில் மீண்டும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார், இவர் ஏற்கனவே வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதை சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் நாக வம்சி (Naga vamsi) தயாரிக்கும் நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் இன்று 2026 மார்ச் 16ம் தேதியில் இப்படத்தின் உணர்ச்சிப்பூர்வமான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A story of dreams, emotions and unexpected love unfolds. ❤️
Presenting the world of Sanjay Vishwanath.
The #VishwanathAndSonsTeaser is out now! 😎Tamil – https://t.co/0GBGv3BqdK
Telugu – https://t.co/VXutZw7NOI #VishwanathAndSons ~ The biggest family entertainer of 2026, in… pic.twitter.com/KopNTLfYK5— Sithara Entertainments (@SitharaEnts) March 16, 2026
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :
சூர்யா இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் தெலுங்கிலும் கதாநாயகனாக நடித்துள்ள. இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழி படமாக தயாராகியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ராதிகா சரத்குமார் ரவீனா டாண்டன் மற்றும் பவனி ஸ்ரீ போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா 40 வயது தக்க பிஸ்னஸ் மேனாகவும், நடிகை மமிதா பைஜூ 20 வயது பெண்ணாகவும் நடித்துள்ளாராம்.
இதையும் படிங்க: டிமான்டி காலனி 3 திரைப்படம்.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
இவர்கள் இருவருக்கும் இடையே மலரும் காதலை மையமாக கொண்டு இப்படம் தயாராகியுள்ளதாம். இப்படமானது முற்றிலும் குடும்ப பொழுதுபோக்கு கதையை கொண்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், பாடல்களும் சிறப்பாக வந்துள்ளதாம். இப்படமானது இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், 2026ம் ஜூலை மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 23ம் தேதியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.