AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 98வது ஆஸ்கர் விருது விழாவை எங்கு எப்போது காணலாம்?

98th Academy Awards Ceremony When And Where To Watch: உலக அளவில் சினிமாவில் உயரிய விருதாக கருத்தப்படும் ஆஸ்கர் விருது விழா நேற்று அமெரிக்காவில் நடைப்பெற்றது. இதனை எப்படி பார்க்கலாம் என்பது குறித்த அப்டேட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலக சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 98வது ஆஸ்கர் விருது விழாவை எங்கு எப்போது காணலாம்?
ஆஸ்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Mar 2026 08:05 AM IST

உலக அளவில் சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா நேற்று மார்ச் மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்றது. 98வது ஆஸ்கர் விருது விழாவில் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். மேலும் இந்த விழாவில் உலகில் பல்வேறு பகுதிகளில் சினிமா துறையில் சிறப்பாக பங்காற்றிய பலருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லினியர் என்ற இந்திப் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை கடந்த 2009-ம் ஆண்டு வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் குறிப்பாக தமிழ் சினிமாவை பெருமைப்படுத்தினார். தொடர்ந்து விருதைப் பெற்றப் பிறகு எல்லா புகழும் இறைவனுக்கே என்று தமிழ் மொழியில் அவர் கூறியது அனைவரின் கவனத்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் அடுத்ததாக இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதை பெற்று இந்திய சினிமாவிற்குப் பெறுமை சேர்த்தார். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வென்றவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

98வது ஆஸ்கர் விருது விழாவை எங்கு எப்போது காணலாம்?

அமெரிக்காவில் நேற்று 2026ம் ஆண்டுக்கான 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பலர் விருதுகளை வென்றுள்ளனர். அது தொடர்பான பட்டியல் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியினை எங்கு எபோது பார்க்கலாம் என்பது குறித்து பார்க்கலாம். அதன்படி இந்தியாவைப் பொருத்தவரை இந்த 2026ம் ஆண்டுக்கான 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் வழங்கும் விழாவை காலை 5:30 மணியில் இருந்து ஜியோ ஹாட்ஸ்டார் லைவில் காணக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… மகாராஜா 2 படத்தின் கதையை முடித்துவிட்டார் இயக்குநர் நித்திலன் – நடிகர் விஜய் சேதுபதி

ஆஸ்கர் விருது வழங்கும் குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கல்யாணி சினிமாவிற்கு வந்தது இப்படிதான்.. ஒரு அப்பாவாக பெருமையாக இருக்கு – பிரியதர்ஷன்!

Follow Us