கல்யாணி சினிமாவிற்கு வந்தது இப்படிதான்.. ஒரு அப்பாவாக பெருமையாக இருக்கு – பிரியதர்ஷன்!
Director Priyadarshan About Kalyani Priyadarshan: மலையாள சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரியதர்ஷன். இவரின் மகள்தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் பிரியதர்ஷன், மகள் கல்யாணி குறித்து பெருமைபடும் விஷயம் மற்றும் அவரின் சினிமா பார்வை குறித்தும் பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராகவும் கதாசிரியராகவும் இருந்துவருபவர் பிரியதர்ஷன் (Priyadarshan). மலையாள சினிமாவில் பல படங்களை இவர் இயக்கியுள்ள நிலையில், பல விருதுகள் இவருக்கு கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளாராம். இயக்குநராக இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் இவரின் மகள் கல்யாணி பிரியதர்ஷனும் (Kalyani Priyadarshan) சினிமாவில் கதாநாயகியாக படங்களில் நடித்துவருகிறார். மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த இவர், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அதிலும் இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியான லோகா (Lokah) படமானது பான் இந்திய வெற்றி படமாக அமைந்தது. கிட்டத்தட்ட ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது.
அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கல்யாணியின் தந்தை இயக்குநர் பிரியதர்ஷன் பேசியிருந்தார். அதில் நடிகை கல்யாணியின் சினிமா பார்வை, அவர் எவ்வாறு சினிமாவில் நுழைந்தார் மற்றும் அவரின் முன்னேற்றம் பற்றி பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஜன நாயகன் மற்றும் கருப்பு படத்தின் நிலமை என்ன? ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!
நடிகை கல்யாண் பிரியதர்ஷன் சினிமா நுழைவு பற்றி இயக்குநர் பிரியதர்ஷன் பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் பிரியதர்ஷன், “கல்யாணியும், நானும் எங்களின் படங்களை குறித்து ஒருவருக்கொருவர் பேசுக்கொள்ளமாட்டோம். அவரும் அவர் நடிக்கும் படம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கமாட்டார், நானும் அப்படித்தான். அவர் இந்த காலத்து இளம்பெண் அல்லவே. எனக்கு அவர் நடித்த லோகா படம் பிடித்திருந்தது. ஒரு தந்தையாக பெருமை படுகிறேன், மேலும் ஒரு இயக்குநராக அவரை பாராட்டுகிறேன். நான், கல்யாணி கேமராவை எதிரிற்கொள்ளமாட்டார் என நினைத்தேன். ஏனென்றால் அவருக்கு சிறுவயதிலிருந்தே படப்பிடிப்பு தளங்களுக்கு வருவது பிடிக்காது.
இதையும் படிங்க: துரந்தர் படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது – விஜய் சேதுபதி பேச்சு!
அவர் ஒரு கட்டிடக்கலை நிபுணர், அவருக்கு அது ஆகவேண்டும் என்பதுதான் ஆசை. பின் திடீரென்று, நாகார்ஜுனா அவளை நடிக்க வைக்க அழைத்தார். நான் உடனே அவளால் நடிக்க முடியாது என்று நான் சொன்னேன். ஆனால் கல்யாணி என்னிடம், ‘நான் ஏன் அதை முயற்சிக்கக்கூடாது?’ என்று கேட்டார். எனக்கு சினிமா செட்டாகவில்லை என்றால் மீண்டும் கட்டிடக்கலைக்கே சென்றுவிடுவேன்” என கூறினார் என்று அதில் அவர் பேசியிருந்தார்.
மகள் கல்யாணி குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் பேசிய வீடியோ பதிவு:
“I never thought #KalyaniPriyadarshan would ever face the camera, because she never liked come to film sets.
All of a sudden, I think #Nagarjuna called me to cast her, and I said she can’t act, but she asked me, ‘Why can’t I try it?’”
– #Priyadarshan pic.twitter.com/KxgUnC5U9d
— Whynot Cinemas (@whynotcinemass_) March 15, 2026
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தமிழில் கார்த்தியின் மார்ஷல் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இதை இயக்குநர் தமிழ் இயக்கிவரும் நிலையில், இதில் மீனவ பெண்ணாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் லோக படத்தின் பாகம் 2-விலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.