Yogi Babu: AA22 படத்தில் எனக்காக அல்லு அர்ஜுன் சார் செய்த விஷயம் – நெகிழ்ச்சியாக பேசிய யோகி பாபு!
Yogi Babu About Allu Arjun: தமிழில் பிரபல நடிகராக கலக்கிவருபவர் யோகி பாபு. இவர் படங்களில் கதாநாயகனாகவும் மற்றும் முக்கிய வேடங்களிலும் நடித்துவருகிறார். இவர் பிரம்மாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜுனின் AA22 திரைப்படத்தில் நடிக்கும் நிலையில், அதில் தனக்காக அல்லு அர்ஜுன் செய்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் யோகி பாபு (Yogi Babu) தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துவந்தார். பின் காமெடியனாக படங்களில் நடிக்க தொடங்கிய இவர், தற்போது படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajithkumar) வரை பல உச்ச பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “கெணத்த காணோம்” (Kenath Kanom). கடந்த 2026 மார்ச் 13ம் தேதி முதல் இப்படமானது உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இதை மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இவர் இப்படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் மற்றொரு இயக்குநர் இதை இயக்கியிருந்த நிலையில், நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிக்கு படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
அந்த வகையில் அட்லீ (Atlee) இயக்கத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) கதாநாயகனாக நடிக்கும், AA22 படத்திலும் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த யோகி பாபு, AA22 திரைப்படத்தில் நடிப்பது குறித்தும் மற்றும் அல்லு அர்ஜுன் தனக்காக செய்த விஷயம் பற்றியும் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன் – விஜய் சேதுபதி ஓபன் டாக்
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் AA22 திரைப்படத்தில் நடிப்பது குறித்து யோகிபாபு பேசிய விஷயம்:
அந்த நேர்காணலில் பேசிய யோகி பாபு, “எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும், ஆனால் மற்றமொழி இயக்குநர்களும் என் முகபாவனைகளை விரும்புகிறார்கள். அதனால் என்னை அணுகுகிறார்கள். மாவீரன் படத்தில், “பேட்ச்வொர்க்” என்ற காமெடி காட்சி, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தியில் மொழியில் அட்லீ எனக்கு பொருத்தமாக இருக்கிறார்.
இதையும் படிங்க: வெக்கேஷனுக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!
அதனால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இப்போது நான் அல்லு அர்ஜுன் சாரின் AA22 படத்தில் நடிக்கிறேன். என்னிடம் அட்லீ, “அண்ணா நீங்க ரெண்டு மொழியை பேசி நடிக்கலாம் என கூறினார். ஆனால் இதை கேட்ட அல்லு அர்ஜுன் சார், நீங்க தமிழில் பேசலாமே, நாங்க அதை டப்பிங்கில் மாற்றிவிடலாம் என எனக்காக பேசினார்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
கெணத்த காணோம் திரைப்படம் குறித்து யோகி பாபு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Thankyou my dear @Dir_Lokesh 🤝🫂 https://t.co/JXPgAvPkNQ
— Yogi Babu (@iYogiBabu) March 13, 2026
யோகி பாபு தொடர்ந்து புது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் இவரின் படங்களுக்கு தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புது படத்திலும் இவர் ரெட்டை வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.