Sivakarthikeyan: வெக்கேஷனுக்கு குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்ற சிவகார்த்திகேயன் – வைரலாகும் போட்டோஸ்!
Sivakarthikeyan Family Vacation: சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான தாய் கிழவி என்ற படத்தை தயாரித்து, மிக பிரம்மாண்ட வெற்றியை பெற்றருந்தார். அந்த விதத்தில் தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் விதத்தில், சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தொடர்ந்து சினிமாவில் புதிய படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக பராசக்தி (Parasakthi) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதையடுத்து இவர் சேயோன் (Seyon) என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை தயாரித்துவரும் நிலையில், இவரின் தயாரிப்பில் தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற திரைப்படமானது சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதில் ராதிகா சரத்குமார் லீட் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேப்பை பெற்றுவந்தது. தயாரிப்பாளராக இவர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சேயோன் பட ஷூட்டிங்கில் இவர் விரைவில் இணையவுள்ள நிலையில், அதற்கு முன் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
அவர் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா மற்றும் மகன்கள் பவன், குகனுடன் சிங்கப்பூரில் விடுமுறை நாட்களை கழித்துவருகிறார். தனது குடும்பத்துடன் சிங்கப்பூரில் விடுமுறை தினத்தை கழிக்கும் விதத்தில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விக்ரம் படத்தில் அந்த காட்சியில் என்னை கேலி செய்வார்கள் என்று நினைத்தேன் – விஜய் சேதுபதி ஓபன் டாக்
சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படங்கள்:
சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படம் SK26 என தற்காலிகமாக அழைக்கப்பட்டுவந்தது. இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் நிறைவடைந்த நிலையில், ஷூட்டிங்கும் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்ற படத்தில் இணைந்துவிட்டார். இதை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் நிலையில், மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகிவருகிறதாம்.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் பர்த்டே ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட டிசி படக்குழு!
இப்படத்தின் ப்ரீ- ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்குகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் ஒரே அட்டவணையில் எடுக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பின் எந்த இடைவெளியும் இல்லாமல், இந்த ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை அடுத்தாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீண்டும் அவர் சிவகுமார் முருகேசனின் இயக்கத்தில் புது படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் இந்த படங்கள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.