AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரிஷாவா இல்ல நயன்தாராவா? கார்த்தி – மோகன் ராஜாவுடன் இணையும் பட நடிகை இவரா?

Karthi's 31st Film with Mohan Raja: மோகன் ராஜா பல ஆண்டுகளுக்கு பின், தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் எந்த நடிகை நடிக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

திரிஷாவா இல்ல நயன்தாராவா? கார்த்தி – மோகன் ராஜாவுடன் இணையும் பட நடிகை இவரா?
மோகன் ராஜ் மற்றும் கார்த்தி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Aug 2026 17:58 PM IST

தென்னிந்திய சினிமாவில் சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் வா வாத்தயார் (Vaa vaathiyaar). கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இப்படத்திற்கு பின், தமிழில் கார்த்தி மார்ஷல் (Marshal) என்ற படத்தில் நாயகனாக நடித்துவந்தார். இப்படத்தை இயக்குநர் தமிழ் இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து தனது 30வது படத்தில் கல்யாண் சங்கர் (Kalyan Shankar) என்ற தெலுங்கு இயக்குநருடன் இணைந்துவிட்டார்.

இதையடுத்து கார்த்தி இணைந்துள்ள இயக்குநர்தான் மோகன் ராஜா (Director Mohan Raja). இவர் கார்த்தியின் 31வது படத்தை இயக்கவுள்ள நிலையில், சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, எந்த நடிகை நடிக்கவுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அல்லாக்க லோவா பாடல் உருவானவிதம் இப்படிதான் – படக்குழு வெளியிட்ட வீடியோ!

கார்த்தி மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் இணையும் நடிகை யார்?:

நடிகர் கார்த்தி தெலுங்கில் தனது 30வது படத்தில், நடிகை மீனாட்சி சௌத்ரியுடன் இணைந்து நடித்தவருகிறார். இந்த படமானது அதிரடியான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு பின் மோகன் ராஜா இயக்கத்தில், புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக காட் ஃபாத்தர் என்ற தெலுங்கு படத்தை இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: சூர்யா 47 படத்தின் ரிலீஸ் எப்போது? நடிகர் சூர்யா விளக்கம்

இதையடுத்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பின் புது படத்தில் இணைந்துள்ளார். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்க, அதில் நயன்தாரா நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங்கின்போது நயன்தாராவிற்கு தேதிகள் கிடைக்காவிட்டால், அதில் திரிஷாவை நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜாவுடன் புதிய திரைப்படத்தில் இணைந்தது குறித்து கார்த்தி பகிர்ந்த எக்ஸ் பதிவு:

கார்த்தியின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டு வெளியீட்டிற்கு தயாராகிவரும் படமாக சர்தார் 2 உள்ளது. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இதை இயக்க, சிறப்போன அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இப்படம் விபரம் செப்டம்பர் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள மார்ஷல் படமானது 2026ம் ஆண்டு தீபாவளியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us