OM: அல்லாக்க லோவா பாடல் உருவானவிதம் இப்படிதான் – படக்குழு வெளியிட்ட வீடியோ!
Alaakaa Loova song Making Video: தனுஷின் தயாரிப்பிலும், நடிப்பிலும் சிறப்பான திரைப்படமாக உருவாகிவருவதும் ஓம். இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இசையமைத்துவருகிறார். இப்படத்திலிருந்து அல்லாக்க லோவா என்ற பாடல் வெளியான நிலையில், அது உருவான விதம் குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகன் மற்றும் தேசிய விருதுபெற்ற இயக்குநராகவும் புகழ்பெற்றுவருபவர் தனுஷ் (Dhanush). இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் யோதுவரை 4 படங்களை இயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கர (Kara). அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தை முடித்த கையேடு தனுஷ் இணைந்த புது திரைப்படம்தான் ஓம் (OM). இதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்க, தனுஷ் தனது சொந்த தயாரிப்பின் கீழ் தயாரித்துவருகிறார்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மேலும் சமீபத்தில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓம் பட முதல் பாடலான அல்லாக்க லோவா (Alaakaa Loova) வெளியானது. இந்நிலையில் தற்போது இப்பாடல் உருவானவிதத்தில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது .




இதையும் படிங்க: தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென திருக்குறள் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் – அர்த்தம் என்ன தெரியுமா?
அல்லாக்க லோவா பாடல் உருவான விதம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு வீடியோ:
From the man with the pen 🖋️
Lyric writer Rokesh talks about the journey of writing Alaakaa Loova, the chartbuster from #OM!
Tamil: https://t.co/SD6KdldsCC
Telugu: https://t.co/dXx2mOzv43
Hindi: https://t.co/XotFciZW8ZA @SaiAbhyankkar Musical festival.@dhanushkraja… pic.twitter.com/lrEbalLiuM
— Wunderbar Films (@wunderbarfilms) August 4, 2026
அல்லாக்க லோவா பாடல் உருவான விதம்:
இந்த பாடலானது தமிழிலே வித்தியாசமாக இருந்தது. இப்பாடலின் வரிகளை ரசிகர்களுக்கும் பொருந்தும்வகையில் இயக்குனர் ராஜ் குமார் எழுத சொன்னதாக பாடலாசிரியர் ராகேஷ் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனுஷின் ஓம் திரைப்பட ஷூட்டிங் எப்போது முடியும்:
தனுஷின் இந்த ஓம் திரைப்படத்தில் அவர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா ஜோடியாக நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முக முக்கியமான போலீஸ் அதிகாரியக்க நடித்துள்ளாராம். இதில் அவர் கொஞ்சம் நெகடிவ் சார்ந்த வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் செம்மரக் கடத்தல் தொடர்பான திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறதாம்.
இதையும் படிங்க: ட்ரெய்ன் படத்தின் ரிலீஸ் தாமதமாக இதுதான் காரணம் – நடிகர் விஜய் சேதுபதி
இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாம். தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் திருவண்ணாமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றுவருகிறதாம். இதன் ஷூட்டிங்கில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் உறுதியோடு நிறைவடையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.