AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன்னா பென்னின் இந்த சாரா’ஸ் படத்தை பார்த்துருக்கீங்களா? இல்லனா மிஸ் பண்ணாம பருங்க

Actress Anna Ben Sara's Movie OTT Update | மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை அன்னா பென். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற சாரா’ஸ் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்று பார்ப்போம்.

அன்னா பென்னின் இந்த சாரா’ஸ் படத்தை பார்த்துருக்கீங்களா? இல்லனா மிஸ் பண்ணாம பருங்க
சாரா’ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Aug 2026 21:06 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 05-ம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியான படம் சாரா’ஸ். இந்தப் படத்தில் நடிகை அன்னா பென் நாயகியாக நடித்து இருந்தார். இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் எழுதி இயக்கி இருந்த இந்தப் படம் ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான காரணத்தால் மலையாள சினிமா மக்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகை அன்னா பென் கதையின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவர் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி நடிகர்கள் சன்னி வெய்ன், பென்னி பி. நாயரம்பலம், மல்லிகா சுகுமாரன், பிரசாந்த் நாயர் ஐ.ஏ.எஸ். ஸ்ரீலட்சுமி ஹரிதாஸ், தன்யா வர்மா, சித்திக், விஜயகுமார், ஹரிகிருஷ்ணன், ஸ்ரீந்தா, ஜிபு ஜேக்கப், கோட்டயம் பிரதீப், துஷாரா, மார்கரீட், விருத்தி விஷால், சிஜு வில்சன், அல்தாஃப் மனாஃப், அஜு வர்கீஸ், ஷான் ரஹ்மான், வினீத் ஸ்ரீனிவாசன், ஸ்ம்ருதி அனிஷ் என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

சாரா’ஸ் படத்தின் கதை இதுதான்:

இந்தப் படத்தில் நாயகி சாரா சினிமா துறையில் ஒரு சுதந்திரமான இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் போது நாயகன் ஜீவனை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். குழந்தை பெற்றுக் கொள்வதில் விருப்பம் இல்லாத நாயகி நாயகனுக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாலேயே அவரை திருமணம் செய்து இருப்பார்.

Also Read… டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்… நடிகை ஹூமா குரேசி பேச்சு

நாயகியின் இந்த முடிவு குடும்பத்தினர் இடையே சலசலப்பை ஏற்படுத்துகிறது. அப்போது நாயகிக்கு இயக்குநராக வேண்டும் என்ற கனவு ஒரு பக்கம் இந்த குழந்தை என்ற அழுத்தம் ஒரு பக்கம் என ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் நாயகிக்கு பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் எப்படி சரி ஆனது அவர் இயக்குநராக ஆனாரா இல்லையா என்பதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

Also Read… வெளியானது ஜீவாவின் தகப்பன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Follow Us