AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்… நடிகை ஹூமா குரேசி பேச்சு

Actress Huma Qureshi talks about Toxic movie | பான் இந்திய மொழிகளில் பிரபல நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஹூமா குரேஷி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் டாக்ஸிக் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்… நடிகை ஹூமா குரேசி பேச்சு
ஹூமா குரேசிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Aug 2026 17:03 PM IST

பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஹூம குரேசி. இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து இந்தி மொழியில் நடிகையாக நடிக்கத் தொடங்கிய இவர் தொடர்ந்து இந்தி மொழியில் படங்கள் மற்றும் இணையதள தொடர்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து இந்தி மட்டும் இன்றி மராத்தி, மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகை ஹூமா குரேசியை தமிழ் சினிமா ரசிகர்கள் காலாவின் காதலி என்றே அழைப்பார்கள். ஆம் தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா என்ற படத்தின் மூலமாகவே நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் காதலியாக நடிகை ஹூமா குரேசி நடித்து இருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ஹூமா குரேசி அஜித் குமார் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்கள் மட்டுமே நடிகை ஹூமா குரேசி தமிழ் மொழியில் நடித்த இரண்டு படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மற்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ஹூமா குரேசி இணையத்தில் அதிகம் பேசப்படும் டாக்ஸிக் என்ற படத்திலும் நடித்து உள்ளார். இந்தப் படம் குறித்து சமீபத்தில் அவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்:

இணையத்தில் வெளிப்படும் எதிர்மறையான கருத்துகளுக்கோ அல்லது கேலி-கிண்டல்களுக்கோ (trolls) எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எங்கள் திரைப்படம் தானே அதற்கான பதிலைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம். சில கருத்துகள் மிகுந்த மரியாதைக்குறைவாகவும் மனதை புண்படுத்துவதாகவும் இருந்தன. வெறும் வார்த்தைகளால் மட்டும் மக்களின் மனநிலையை மாற்றிவிட முடியாது; அதனால்தான் திரைப்படமே பேசட்டும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். ‘டாக்சிக்’ (Toxic) திரைப்படம் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் மிகச் சிறந்த முறையில் பதிலளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஹூமா குரேசி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கல்ட் படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜிகர்தண்டா 12 ஆண்டுகளைக் கடந்தது

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!

Follow Us