நோ நடிப்பு… டைரக்ஷன் தான் – யாத்ரா தனுஷ் குறித்து வைரலாகும் தகவல்!
Yathra Dhanush to make his debut in Kollywood as a director | தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக தற்போது அறிமுகம் ஆக உள்ளார் நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தனுஷ். இவர் குறித்த புது தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முதல் தலைமுறையாக இயக்குநர் கஸ்தூரி ராஜா அறிமுகம் ஆனார். அவரைத் தொடர்ந்து அவரது மகன்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்கள். அதில் செல்வராகவன் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிப்பையும் செய்து வருகின்றது. அதே போல நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தொடர்ந்து இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இப்படி பிரபல நாயகனாக வலம் வரும் இவரது மகன் யாத்ரா தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இவர் கஸ்தூரி ராஜாவின் தலைமுறையில் மூன்றாவதாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாத்ரா தனுஷ் கஸ்தூரி ராஜாவின் மகன்வலி பேரன் ஆவார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாரிசுகள் அறிமுகம் ஆகி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷின் மூத்த மகனாக யாத்ரா தனுஷ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்று தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வைரலாகி வருகின்றது.




யாத்ரா தனுஷ் குறித்து வைரலாகும் தகவல்:
அந்த வகையில் முன்னதாக நடிகர் தனுஷின் மகன் யாத்ரா தனுஷ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகிறார் என்றும் அந்தப் படத்தை தனுஷே எழுதி இயக்க உள்ளதாகவும் தக்வல்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தனுஷ், இயக்குநராகக் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். அவர் தனது முதல் அறிமுகப் படத்தை (pilot film) உருவாக்கியுள்ளதோடு, தனது முதல் திரைப்பட இயக்கத்தையும் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… கமல் ஹாசனின் புதுப் படத்தின் பணிகள் எப்போது தொடங்குகிறது? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🚨Breaking : #Dhanush first son ‘Yathra Dhanush’ to make his debut in Kollywood as a director
He has made his first pilot film & Planning to announce his first directional debut as well [soon] pic.twitter.com/JHRLAScmgN
— Kolly Censor (@KollyCensor) August 1, 2026
Also Read… நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ