அக்னிவீரர்களுக்கு குட் நியூஸ்! 4 ஆண்டுகள் இல்லை.. இனி 6 ஆண்டுகள்.. மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு!
Agniveer Scheme: முதல் நான்கு ஆண்டுகளில் நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதன் மூலம் தங்களது அனுபவம், திறன் மற்றும் தகுதியை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இதன் முடிவில் நிரந்தர ராணுவப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பும் உருவாகும் எனத் தெரிவித்தார்.
நவம்பர் 4, 2026: இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னிவீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர்களின் நான்கு ஆண்டுகால பணிக்காலம் நிறைவடைந்த பிறகும், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான முடிவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகள் பணி முடித்து வெளியேற வேண்டிய அக்னிவீரர்களுக்கு ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து அக்னிவீரர்களுக்கும் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார். அவர்களின் செயல்திறன், பணி மதிப்பீடு மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: சில்லறை பிரச்னையால் பறிபோன உயிர்.. பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!
அக்னிபாத் திட்டத்தில் முக்கிய மாற்றம்!
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் பணியாற்றும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, அவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிரந்தர ராணுவப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நடைமுறையில் தற்போது முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நான்கு ஆண்டுகள் பணியை நிறைவு செய்யும் அக்னிவீரர்களில் நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்படாத 75 சதவீதம் பேருக்கும் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, குறிப்பிட்ட தேர்வு விதிமுறைகளைப் பூர்த்தி செய்பவர்கள் மற்றும் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிப்பவர்கள் நிரந்தர ராணுவப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் படிக்க: இன்ஸ்டாகிராமில் வந்த மெசேஜ்.. நம்பிச் சென்ற 17 வயது சிறுவன் சாக்குப் பையில் சடலமாக மீட்பு.. அதிர்ச்சி சம்பவம்!!
அனைத்து அக்னிவீரர்களுக்கும் வாய்ப்பு?
இதுகுறித்து விளக்கமளித்த முப்படைகளின் தலைமைத் தளபதி என்.எஸ். ராஜா சுப்ரமணி, அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு ஆண்டுகால பணிமுறை தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.
முதல் நான்கு ஆண்டுகளில் நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படாதவர்களுக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதன் மூலம் தங்களது அனுபவம், திறன் மற்றும் தகுதியை வெளிப்படுத்துவதற்கான மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இதன் முடிவில் நிரந்தர ராணுவப் பணியில் சேர்வதற்கான வாய்ப்பும் உருவாகும் எனத் தெரிவித்தார்.
தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும், சுமார் 18 ஆயிரம் அக்னிவீரர்கள் தங்களது நான்கு ஆண்டுகால பணியை நிறைவு செய்து வெளியேற இருந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.