AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கல்ட் படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜிகர்தண்டா 12 ஆண்டுகளைக் கடந்தது

12 Years Of Jigarthanda Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஜிகர்தண்டா படம் திரையரங்குகளில் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கல்ட் படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜிகர்தண்டா 12 ஆண்டுகளைக் கடந்தது
ஜிகர்தண்டாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 18:28 PM IST

தமிழ் சினிமாவில் முன்னதாக வெளியான படங்கள் ரசிகர்களிடையே தற்போது கல்ட் என்று கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகம் ஆகும் நபர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் இது என்றும் இந்தப் படம் தான் சினிமாவில் எனக்கு உந்துதலாக இருந்தது என்று தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் இளம் தலைமுறையினர் கொண்டாப்படும் படங்களில் ஒன்று தான் ஜிகர்தண்டா. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி 2012-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர்கள் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, சேதுபதி, நாசர், கருணாகரன், ஆடுகளம் நரேன், அம்பிகா, சங்கிலி முருகன், டெல்லி கணேஷ், சுதா, பம்பாய் ஞானம், அஜய் ரத்னம், மூணார் ரமேஷ், பாலா சிங், தென்னவன், குரு சோமசுந்தரம், எஸ்.பி.கஜராஜ், ராமச்சந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், காளையன், செந்தில் குமரன், அந்தோணி தாசன், பாவா லட்சுமணன், வினோதினி வைத்தியநாதன், தங்கதுரை, நலன் குமாரசாமி, வெற்றிமாறன் மற்றும் பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஆண்டுகளைக் கடந்து ஜிகர்தண்டா படம்:

தமிழ் சினிமாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் இன்றுடன் 12 ஆண்டுகளைக் நிறைவடைந்தது. மேலும் இந்தப் மிகவும் வித்யாசமான பாணியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ராதிகாவின் கதாப்பாத்திரம் ஜாலியா இருக்கும் – வெங்கி அட்லூரி

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Karthik Subbaraj (@ksubbaraj)

Also Read… செலிபிரேஷன் மாதம்.. புது புரோமோ வீடியோவை பகிர்ந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு!

Follow Us