AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ராதிகாவின் கதாப்பாத்திரம் ஜாலியா இருக்கும் – வெங்கி அட்லூரி

Director Venky Atluri talks about Actress Radhika | தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராதிகா. இவர் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ராதிகாவின் கதாப்பாத்திரம் ஜாலியா இருக்கும் – வெங்கி அட்லூரி
ராதிகா - வெங்கி அட்லூரி - சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 18:43 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா. பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். இவர் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பலப் படங்களில் நடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் அண்ணி மற்றும் அக்கா கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ராதிகா தற்போது அம்மா வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் கதையின் நாயகியாக நடித்து சமீபத்தில் வெளியான தாய் கிழவி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவின் அம்மாவாக நடித்து உள்ளார். இவரது கதாப்பாத்திரம் படத்தில் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ராதிகாவின் கதாப்பாத்திரம் ஜாலியா இருக்கும்:

பொதுவாக ‘அம்மா’ கதாபாத்திரம் என்றாலே, அவர்கள் மிகவும் தீவிரமான அல்லது பரிதாபத்திற்குரிய ஒருவராகவே சித்தரிக்கப்படுவார்கள். ஆனால், அந்தப் பிம்பத்தை உடைக்க நான் விரும்பினேன். துடிப்பான, கலகலப்பான ஒரு அம்மாவையே நான் தேடினேன். சொல்லப்போனால், ராதிகா மேடமை விடச் சிறந்த ஒருவரை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவருடைய நிகழ்ச்சிகளைப் பார்த்திருந்தால் தெரியும், அவர் எப்போதும் மிகவும் ஜாலியானவர். எல்லோரையும் கிண்டல் செய்வது, கேலி செய்வது என எங்கு சென்றாலும் ஒரு துடிப்பான ஆற்றலை வெளிப்படுத்துவார். அவர் ஒரு அறைக்குள் நுழையும்போதே, அந்தச் சூழலே ஒரு தனித்துவமான தன்மையைப் பெற்றுவிடும் என்று இயக்குநர் வெங்கி அட்லூரி வெளிப்படையாக பேசியுள்ளார்.

Also Read… Jason Sanjay: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… ஏ சான்றிதழால் வசூலில் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஜன நாயகன் தயாரிப்பாளர்

Follow Us