தர்மன் படத்தில் சிம்ரன் மேம் இணைந்தது இப்படிதான்- இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து!
Ashwath Marimuthu About Simran: தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகை சிம்ரன் இணைந்தது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துவரும் புது திரைப்படம்தான் தர்மன் (Dharman). இந்த படத்தை இயக்குநரும், தற்போது சினிமாவில் நடிகராகவும் நடிக்கும் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) இயக்கிவருகிறார். ஆரம்பத்தில் தலைவர் 173 படம் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்க்கு பின் தர்மன் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ஆரம்பத்தில் சுந்தர் சி இயக்குவதாக கூறப்பட்டது, பின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த இரு இயக்குநர்களும் விலகிய நிலையில், தற்போது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிம்ரன் (Simran), ராஷி கண்ணா (Rashi khanna) இணைந்து நடித்துவருகிறார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அதில், நடிகை சிம்ரன் எவ்வாறு தர்மன் படத்தில் இணைந்தார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!
தர்மன் படத்தில் சிம்ரன் இணைந்தது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்த விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்த அஸ்வத் மாரிமுத்து அதில், “நானும் சிம்ரன் மேமும் JFW விருது விழாவில் முதல் முறையாக சந்தித்தோம். நாங்கள் பேசும்போது, அவருக்கு என் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும், திட்டங்களில் ஒன்றில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். அந்த நேரத்தில், நான் இயக்கவிருந்த STR திட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்தேன்.
இதையும் படிங்க: யோகலட்சுமியின் அலப்பறைகள்.. BTS வீடியோவை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்தின் படக்குழு!
பின்னர், ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, சிம்ரன் மேம் அந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று உணர்ந்தேன். நான் அவரிடம் கதையை விவரித்தேன், அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தர்மன் படத்தில் சிம்ரன் இணைந்தது குறித்து அஸ்வத் மாரிமுத்து பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
Director #AshwathMarimuthu about #Simran Mam:
Simran mam and I met at the JFW Awards. During our conversation, she told me that she really liked my films and said she would love to act in one of my projects. At that time, I was fully occupied with the #STR project. Later, when I… pic.twitter.com/b5y5dCmzoV
— Movie Tamil (@_MovieTamil) July 30, 2026
தர்மன் திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் ஏற்கனவே தொடங்கிவிட்டது, ரஜினிகாந்த் மற்றும் ராஷி கண்ணா இருவரின் போர்ஷன் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறதாம். நடிகை சிம்ரன் சில காட்சியில் இணைந்து நடித்துவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இதன் ஷூட்டிங்கில் முழுமையாக இணைகிறாராம். வரும் 2027ம் ஆண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு வெளியிட்டுள்ளது.