AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த பிரபலத்திற்குதான் எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடம் – நடிகை சிம்ரன் ஓபன் டாக்

Actress Simran talks about her favorite actor | தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் எவர்கிரீன் நாயகியாக வலம் வருபவர் நடிகை சிம்ரன். இவர் சமீபத்திய பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த நாயகன் யார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்த பிரபலத்திற்குதான் எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடம் – நடிகை சிம்ரன் ஓபன் டாக்
சிம்ரன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jul 2026 18:12 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சிம்ரன். இவர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனது இந்தி மொழியில் என்றாலும் தென்னிந்திய மொழிகளில் இவர் ஒரு கட்டத்தில் ஆட்சி செய்து வந்தார் என்று கூறலாம். 90 மற்றும் 2000-களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நாயகன்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகை சிம்ரனின் நடிப்பு மட்டும் இன்றி அவரது நடனமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் சினிமாவில் திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் நடிக்கவில்லை என்றாலும் அவரை எவர்கிரீன் நாயகியாகவே ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தற்போது மீண்டும் படங்களில் தொடர்ந்து நடிக்கத் தொடங்கி உள்ளார். அதன்படி நடிகை சிம்ரன்  நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை சிம்ரன் இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடம் அவருக்குதான்:

அதன்படி நடிகை சிம்ரன் தற்போது தமிழ் சினிமாவில் தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் நிலையில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அந்தப் பேட்டியில் நடிகை சிம்ரன் பேசியதாவது, நான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகன். மற்ற அனைத்து நடிகர்களையும் விட, அவரே எனக்கு எப்போதும் முதன்மையான மற்றும் மிகவும் பிடித்தமான நடிகர். ரஜினி சார் எனக்கு ஒரு முன்மாதிரி என்றும் நடிகை சிம்ரன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கட்டா குஸ்தி பட இயக்குநருடன் இணையும் நடிகர் கென் கருணாஸ் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் நடிகை சிம்ரன் பேச்சு:

Also Read… தேசிய விருது பெற்றவர்களை கொண்டாடிய ஓம் படக்குழுவினர் – வைரலாகும் போஸ்ட்

Follow Us