AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகாராஜா படத்திற்கு துணை நடிகை விருது.. யார் இந்த சாச்சனா நமிதாஸ்?

Sachana Namidass: தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் மூலம் பிராபோலாமானவர் நடிகை சாச்சனா நமிதாஸ். இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலங்களில் ஒருவர். இவருக்கு மகாராஜா படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் தேசிய திரைப்பட விருது கிடைத்துள்ளது. அவரை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

மகாராஜா படத்திற்கு துணை நடிகை விருது.. யார் இந்த சாச்சனா நமிதாஸ்?
சாச்சனா நமிதாஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2026 19:11 PM IST

நடிகை சாச்சனா நமிதாஸ் (Sachana Namidass) தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவர். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்ற நிலையில், தன் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிப்பதற்காக பல முயற்சிகளை எடுத்துவந்தபவர். இவர் இரட்டையர் என்ற நிலையில், இவருக்கு தங்கை ஒருவர் உண்டு. இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர். மாடலிங்காக பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆரம்பத்திலே சினிமாவில் சில அங்கீகரிக்கப்படாத வேடங்களில் நடித்திருந்தார். பின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனின் Nithilan Saminathan) இயக்கத்தில் வெளியான மகாராஜா (Maharaja) என்ற படத்தில் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) மகளாக நடித்திருந்தார்.

2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றிருந்தது. ரூ 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா நமிதாஸுக்கு, 2024ம் ஆண்டிற்காக சிறந்த துணை நடிகை என்ற தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!

நடிகை சாச்சனா நமிதாஸ் தேசிய விருது குறித்து கண்கலங்கிய இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sachana Namidass (@sachanaofficial)

யார் இந்த சாச்சனா நமிதாஸ் :

இவர் சினிமாவில் நடிகையாவதற்கு முன் விளம்பரங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பின் விஜய் சேதுபதியின் மகாராஜா என்ற படத்தில் அவரின் மகளான நடித்து அறிமுகமானார். இதற்கு பின் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். பின் இறுதியாக 2026ல் வெளியான வித் லவ் என்ற படத்திலும் பள்ளி சிறுமியாக நடித்திருந்தார். இவ்வாறு பிரபலமானார். இதற்கு முன், கடந்த 2024ம் ஆண்டில் வெளியான பிக் பாஸ் சீசன் 8 தமிழிலும் போட்டியாளராக கலந்துகொண்டு முதல் நாளிலே வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: சல்மான் கானுக்கு என்ன ஆச்சி.. ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்க – வைரலாகும் வீடியோ!

பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்திருந்தார். இதன் மூலமாகவும் பிரபலமானார். தற்போது இவர் நடிகர் சூரியின் நடிப்பிலும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மண்டாடி என்ற படத்திலும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த துணை நடிகைக்கான 72வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுளத்துள். அதற்காக பல்வேறு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்தி வருகிறார்கள்.

Follow Us