AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

72nd National Film Awards: அமரன் முதல் ராயன் வரை.. 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு லிஸ்ட்!

72nd National Film Awards Winners: ஆண்டுதோறும் இந்திய அரசால், சினிமா பிரபலங்களை கௌரவப்படுத்திவரும் விருதுதான் தேசிய திரைப்பட விருது. நடிகர்கள் மற்றும் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு இதை நடத்திவருகிறது. இந்நிலையில் 2026ம் ஆண்டு 72வது தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

72nd National Film Awards: அமரன் முதல் ராயன் வரை.. 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு லிஸ்ட்!
72வது தேசிய திரைப்பட விருதுகள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 18 Jul 2026 19:24 PM IST

இந்திய அரசின் சார்பாக சினிமா பிரபலங்கள் மற்றும் நடிகர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதுதான் தேசிய திரைப்பட விருது (National Film Award). கடந்த 2025ம் ஆண்டில் 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டதது. அதே போலவே 2024ம் ஆண்டிற்காக, இந்த 2026ம் ஆண்டில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) அறிவிக்கப்பட்டதுள்ளது. 2026ம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று 2026ம் ஆண்டு ஜூலை 18ம் தேதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருது அறிவிப்பில், சிறந்த தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பல்வேறு மொழி படங்கள். சிறந்த இயக்குநர், சிறந்த படங்கள், சிறந்த இசையமைப்பாளர் என பல்வேறு கேட்டகிரியில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் எந்த படங்கள் சிறந்த படங்கள், யார் சிறந்த இயக்குநர் என பல்வேறு வரிசைகளில் அறிவிக்கபட்டுள்ளது. அதில் தனுஷின் ராயன் திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருது கிடைத்துள்ளது. 2024ல் தனுஷ் நடித்த படத்திற்கு மட்டுமே இரு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரியங்கா சோப்ரா பர்த்டே.. வாரணாசி பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட எஸ்.எஸ்.ராஜமௌலி!

72வது தேசிய திரைப்பட விருது வென்ற தமிழ் பிரபலங்கள் மற்றும் படங்கள் :

சிறந்த தமிழ் திரைப்படம் :

2024ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதை, தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ் இயக்குநர்:

2024ம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் என்ற விருதை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி வென்றுள்ளார் என 72வது தேசிய திரைப்பட விழாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசை கலவை பொறியாளர் (ஸ்பெஷல் மென்சன் ) :

ஸ்பெஷல் மென்ஸனாக மெய்யழகன் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலிகளைவிக்கான பொறியாளர் என்ற விருதை சுரேஷன் ஜி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் (ஸ்பெஷல் மென்சன் ):

2024ம் ஆண்டில் வெளியான கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது, 72வது தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேசிய விருதுகள் அறிவிப்பு – ராயன், மெய்யன் படங்களுக்கு விருது- விவரம் இதோ

சிறந்த திரைப்படம் :

72வது தேசிய திரைப்பட விருது அறிவிப்பில், தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த எடிட்டர்:

72வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த எடிட்டருக்கான விருது கலைவண்ணனுக்கு அமரன் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த துணை நடிகை :

72வது தேசிய திரைப்பட விருதுவழங்கும் விழாவில், சிறந்த துணை நடிகைக்கான விருது மகாராஜா படத்தில் நடித்திருந்த சச்சனா நமிதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) :

2024ம் ஆண்டிற்கான சிறந்த பின்னணி இசையமைப்பாளர் என்ற தேசிய விருது, அமரன் திரைப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த ஒலிவடிவமைப்பு :

2024ம் ஆண்டின் சிறந்த ஒலிவடிவமைப்பு என்ற விருது டி.எஸ்.ஹரிஹரசுதனுக்கு புளு படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது :

2024ம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான விருது பிரம்மயுகம் படத்திற்காக மம்முட்டிக்கு, சந்து சாம்பியன் படத்திற்காக பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us