Thaman: இதயம் முரளியின் முதலில் இசையமையவிருந்தவர் அவர்தான்.. அந்த வாய்ப்பை நான் பறித்தேன் – தமன்!
Thaman About Idhayam Murali Movie: தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பாளராக மிகவும் பிரபலமானவர் தமன் எஸ். இவர் தமிழில் சங்கரின் இயக்கத்தில் படத்தில் நடிகராகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதயம் முரளி படத்திலும் நடித்து இசையமைத்திருந்தார். முதல் முதலில் இப்படத்திற்கு யார் இசையமைக்கவிருந்தார் என்பது குறித்து தமன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்துவருபவர் தமன் (Thaman). இவரின் இசையில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை பல்வேறு உச்ச நடிகர்களின் படங்கள் உருவாகியிருக்கிறது. இவரின் இசையமைப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் (Aakash Baskaran) இயக்கத்தில், வெளியான இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்திருந்தார். ஒருதலை காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் அதர்வாவின் (Atharvaa) நண்பனாக ஸ்பெஷல் வேடத்தில் தமன் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாமல் இப்படத்தின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இன்று 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் இப்படத்தின் வெற்றிவிழா கொண்டாடப்பட்டிருந்தது. அதில் பேசிய தமன் இதயம் முரளி படத்தின் முதல் இசையமைப்பாளர் யார் என தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு கொடுத்த சென்சார் அப்டேட்!
இதயம் முரளி படம் குறித்து இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Love to all Of u Guys 🫠💥🙌🏿🥺
Thanks for A Super Successful BLOCKBUSTER Week #Lenin – BLOCKBUSTER 📈#IdhayamMurali – BLOCKBUSTER 📈#OgTourIndia Bengaluru Concert- BLOCKBUSTER 📈
Let’s keep kicking IT 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/v5fAjGdiFt
— thaman S (@MusicThaman) July 12, 2026
இதயம் முரளி படம் குறித்து இசையமைப்பாளர் தமன் பேசிய விஷயம்:
அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய தமன், “எனது நபர் ஒருவர், நீங்க இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்று ஒரு 2டி ட்ரெய்லர் ஒன்று எனக்கு அனுப்பினார். அந்த ட்ரெய்லரிலே கௌதம் மேனன் குரல் கொடுத்திருந்தார். அதை பார்க்கும்போது அதில் இசையமைக்கவேண்டும் என நினைத்தேன். உண்மையில், ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தில் அனிருத் இசையமைக்கவேண்டும் என நினைத்தார். நான்தான் அவரிடம், நான்தான் இசையமைப்பேன், அப்போதுதான் இப்படத்தில் நடிப்பேன் என கூறினேன்.
இதையும் படிங்க: ஹீரோயினுக்கு 4 மணிநேரம் இன்டெர்வியூ வெச்சாரு நெல்சன் – சிவகார்த்திகேயன் பகிர்ந்த கலகலப்பு சம்பவம்!
இந்த படத்தின் கதைக்களம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சுமோவை எழுப்புவோம், லாரியை எழுப்புவோம், ஏன் நம்மை எழுப்ப கூடாது என இதில் நான் நடித்திருந்தேன். என்னை யாரவது சரியாக நடிக்க தெரியவில்லை என்று சொன்னால் எனக்கு பிடிக்காது. எனக்கு நடிக்கவே வராது சாதாரணமாக, ஆனால் ஷங்கர் சாரே அவரின் படத்தில் நடிக்க வைத்துவிட்டார்” என அதில் நகைச்சுவையாக பேசியிருந்தார். தற்போது இதயம் முரளி திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.